அயல் நாட்டு தூதுவர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வது வழக்கமானது. அதிகாரப்பூர்வமாக தேவையான ஒன்று என்பதைத் தவிர இதற்கு வேறு எந்த குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் கிடையாது. பல வெளிநாட்டு பிரமுகர்களின் இந்திய வருகைகள் இரண்டு நாடுகளின் இருதரப்பு உறவிலோ அல்லது மற்ற செயல்பாடுகளிலோ எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் சில சமயங்களில் இத்தகையவர்களின் தொணி மற்றும் பாணி ஆகியவை எதிர்பார்த்ததைவிட மேலும் விஷயங்களை வெளிப்படுத்தி ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருப்பதை குறிக்கிறது. கடந்த வாரம் இந்தியாவிற்கு இரண்டு முக்கியமான பார்வையாளர்கள் வந்தார்கள் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லவ்ராவ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு பருவநிலை தூதர் ஜான் கெர்ரி.
எந்தவித பெரிய ஆவணங்களில் கையெழுத்திடும் அல்லது அது பெரிய அறிவிப்புகளை வெளியிட இவர்கள் வரவில்லை. இவை வழக்கமான வருகைகள். ஒன்று, அடுத்து ரஷ்ய அதிபர் இந்தியாவிற்கு வரவிருப்பதற்கான வேலைகளை ஆரம்பித்து வைப்பதற்கு, மற்றொன்று சுற்றுச்சூழல் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் நோக்கங்களை மதிப்பிடுவதற்கு.
தற்போதைய இந்திய-ரஷ்ய மற்றும் இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து ஹர்ஷ் பாண்ட் எழுதிய கட்டுரையின் தமிழ் சாராம்சமே இக்கட்டுரை.
ஆனால் இந்த இரண்டு குறுகிய வருகைகளும் இந்தியா-ரஷ்யா மற்றும் இந்தியா-அமெரிக்கா உறவுகளில் நிலைப்பாடு பற்றி அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ராவ் குறிப்பிடுகையில், "இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டுறவின் மையத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால நட்பு உள்ளது" என்று கூறினார். இரண்டு நாடுகளின் உறவுகளும் மூலோபாய கூட்டாண்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்பதே வெளிப்படை.