இதுக்கு எங்க தலையை கூட வெட்டிருங்க - ஆப்கானிஸ்தானில் பெண்கள் அனுபவிக்கும் வேதனைகள்

'விலங்குகளை விட நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம்' என ஆப்கான் நாட்டின் இளம் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-26 03:05 GMT

'விலங்குகளை விட நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம்' என ஆப்கான் நாட்டின் இளம் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சி பொறுப்பை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள பெண்களுக்கு எதிராக சட்டங்கள் மிகவும் கடுமையாக விதிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் ஆண்கள் இல்லாமல் வெளியில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பூங்காங்களுக்கு செல்ல தடை, கட்டாய ஹிஜாப், பர்தா போன்ற கடுமையான சட்டங்களை பெண்கள் எதிர் கொண்டு வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானில் சில இடங்களில் பெண்களுக்கு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூட செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் போதாது என்று தற்பொழுது பெண்களின் உயர் கல்வியை மொத்தமாக சிதைக்கும் விதமாக பெண்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தடை விதித்திருக்கிறது தாலிபன் அரசு. பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு கனவுகளுடன் இருந்த பல பெண்களுக்கு இந்த செய்தி இடி போல் தலையில் விழுந்துள்ளது.

மருத்துவ கனவுடன் மருத்துவ பல்கலைக்கழலை சேர ஆசைப்பட்ட பெண், 'இதற்கு பெண்களின் தலையை வெட்ட உத்தரவிட்டிருந்தால் சந்தோஷமாக இருக்கும்' என வேதனை தெரிவித்தார். ஊடகம் ஒன்றில் பேசிய மார்வோ என்ற பெண், 'நாம் மிகவும் துரதிஷ்ட சாலிகளாக இருப்பதற்கு இந்த உலகில் நான் பிறந்திருக்கவே கூடாது என நினைக்கிறேன், இந்த உலகில் இருப்பதற்காக நான் வருந்துகிறேன். பெண்களின் தலையை துண்டிக்க அவர்கள் உத்தரவிட்டால் அதை தடை விட சிறப்பாக இருந்திருக்கும், விலங்குகளை விட மோசமாக நாங்கள் நடத்தப்படுகிறோம். விலங்குகள் கூட எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் பெண்களான எங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறக் கூட உரிமை இல்லை' என வேதனையுடன் கூறியுள்ளார்.


Source - Junior Vikatan

Similar News