தலித்துகளை இந்துக்களிடமிருந்து பிரிக்கும் நோக்கம் கொண்ட பத்திரிகை செய்தி ! இடதுசாரி சார்புள்ள ஊடகங்களின் நோக்கம் என்ன ?

முழு உள்நோக்கம் : அரசியல் ஆதாயமும், இந்து சமுதாயத்தை பல துண்டுகளால் பிளக்க வேண்டும் என்பதே !

Update: 2021-09-25 13:36 GMT

கடந்த செப்டம்பர் 19 ,2021 அன்று ANI நியூஸ் ஏஜென்சி தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தப் செய்தியில்  " பஞ்சாப் மாநிலத்தில் 2 துணை முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் ஒருவர் இந்து  மற்றொருவர் தலித் M.L.A " என்ற ஒரு உள்நோக்கம் கொண்ட ஒரு ட்வீட்டை பதிவு செய்தது.




 

இதை கவனித்த தலித் தலைவரும் பி.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினருமான ஹரி மஞ்ஜி வெகுண்டெழுந்தார் , "தலித்களும் இந்துக்களே". தலித்களை இந்துக்களிடம் இருந்து பிரிக்கும் இந்த ஊடகங்களின் தவறான சித்தரிப்பை தாக்கினார்.

"நாங்களும் இந்துக்களே ! எதற்காக இந்த ஊடகம் ஒரு தவறான கருத்தாக்கத்தை  முன்னெடுக்கிறது" என மஞ்ஜி அந்த A.N.I பதிவிற்கு எதிர்வினை ஆற்றினார்.

மத்தியபிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா கடுமையான எதிர்ப்பை  தெரிவித்தார் அவர் கூறியதாவது " A.N.I செய்தி நிறுவனம் நம்பகத்தன்மை கொண்ட ஒரு செய்தி நிறுவனம். என்னுடைய கருத்துப்படி இச்செயல் இந்து சமுதாய ஒற்றுமைக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஏற்புடையதல்ல." 

மேலும் அவர் கூறுகையில் " A.N.I  செய்தி நிறுவனத்திற்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் இந்த தவறை செய்த அந்த உள்நோக்கம் கொண்டவரை தண்டிக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்தப் பதிவை A.N.I நிறுவனம் பதிவிட்ட பின் சமூக வலைதளங்களில் அந்த பதிவிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.

சமூக வலைதளங்களில் பலரும் "தலித்களை இந்த சமுதாயத்திடமிருந்து பிரிப்பதை   இடதுசாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்கள் மேற்கொள்கின்றன" என்று பதிவு செய்து வாதிட்டனர்.

தலித்துகளை இந்துக்களிடமிருந்து பிரிப்பதன்  மூலம் இடது சாரிகள்  அடையக்கூடிய பயன் என்ன ???

இதற்கான முழு உள்நோக்கம் : அரசியல் ஆதாயமும், இந்து சமுதாயத்தை பல துண்டுகளால் பிளக்க வேண்டும் என்பதே ! 

அதனால்தான் தலித்களை இந்து சமுதாயத்திற்கு எதிராக முன்னிலைப் படுத்துகின்றனர்  இடதுசாரி ஊடகங்கள். இதே யுக்திதான்  ஜாட்டுக்களை குஜார்ஸுக்கும், தென்னிந்தியர்களை இந்தி மொழி பேசும் மக்களுக்கு எதிராக பிரித்துள்ளனர். இப்படிப் பிரிப்பதன்  நோக்கம் அகண்டு விரிந்த இந்த இந்து சமுதாயத்தை  பல துண்டுகளாகப் பிரித்து, இந்து சமுதாயத்தை வலுவிழக்கச் செய்து, மாற்று மதத்தை இந்த மண்ணில் வலுவடையச் செய்வதே. இந்த யுக்த்தியை தான் பல ஆண்டுகளாக இடதுசாரி ஆதரவு கொண்ட பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கை நிறுவனங்களும் செய்து வருகின்றன.  

பிரதமர் நரேந்திர மோடி 2014ல் பிரதமராக தேர்வு செய்தபின் இத்தகைய  யுக்திகள் மண்ணாகி போகின. பிரதமர் நரேந்திர மோடி இந்து சமுதாயத்தின்  அனைத்து தரப்பினருக்குமான தலைவராக விளங்கி வருகிறார். அவரது அரசியல்  இந்து சமுதாயத்தை வலுவாக  ஒரு குடையில் வைத்திருக்கும் நோக்கம் கொண்டு இருப்பதால் அந்த இடதுசாரி மையமான பத்திரிக்கை நிறுவனங்களும் கலக்கம் அடைந்து. வெளிப்படையாக இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இடதுசாரிகள், பகுத்தறிவாளர்கள், கடவுள்மறுப்பாளர்கள் மற்றும் முற்போக்காளர்கள் என்ற முகத்திரையில் இந்து மதத்தை ஒழிக்கும்  கருத்தாக்கங்கள் பரப்பப்படுவது புதிதா என்ன ???

OPIndia


Tags:    

Similar News