முக்கியமாக இத்தலைவர்கள், மியான்மர் நெருக்கடிக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு கண்டறிய வேண்டும் என்று உறுதி கூறினர்.
வெளிப்படையாகப் பார்த்தால் மியான்மர் விவகாரத்தில் QUAD நாடுகளுக்குள் பிளவு போல் தோன்றும். ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இந்த ராணுவ ஆட்சிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மியான்மரை தனிமைப்படுத்தி மேலும் அவர்களை சீனாவின் பக்கம் தள்ளி விடலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்தியாவும் ஜப்பானும் மிகவும் வலிமை குறைவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து மியான்மரில் இருக்கும் நெருக்கடிக்கு ஒரு முடிவு கொண்டு வர முடியும். இந்தியாவும் ஜப்பானும் சமீபத்தில் மியான்மர் ராணுவத்துடன் ராணுவ ரீதியாக பயிற்சி அளித்து ஒத்துழைப்பு அளிக்கும் இரு நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.
இதனால் மியான்மர் இராணுவத்தின் மீது ஓரளவிற்கு இவர்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவும் ஜப்பானும் அமைதியாக மியான்மரில் ஜனநாயகத்தை கொண்டுவந்து. சீனாவின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மியான்மரின் போராட்டக்காரர்கள் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் இந்த நிலையில் இந்தியாவும் ஜப்பானும் இதில் தலையிடுவது சரியானதாக இருக்கும். இந்தியாவும் ஜப்பானும், மியான்மரில் நடந்துவரும் அதிகாரத்திற்கான போராட்டத்தில் என்னென்ன விவகாரங்கள் முக்கியமானவை என்பதை தெளிவாக அறிந்துள்ளன.
2015இல் ஆங் சாங் சூகி பதவி பிரமாணம் ஏற்ற பொழுது, ஜப்பானின் மூலோபாய திட்டம் அவருடன் தொடர்பில் இருக்கும் இருப்பது மட்டுமல்லாமல் மியான்மர் இராணுவத்தினருடனும் தொடர்பில் இருப்பதாக இருந்தது.
2017இல் ரோகின்யா பிரச்சனைகள் அதிகரித்தபோது மேலைநாடுகள் மியான்மரிலிருந்து முதலீடுகளை விலகிக் கொண்டன ஆனால் ஜப்பான் தொடர்ந்து அங்கே முதலீடுகளை செய்தது மட்டுமல்லாமல் வெளிநாட்டு உதவிகளை அளித்து மியான்மருக்கு அதிக நிதி வழங்கும் மூன்றாவது மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது.
இதன் காரணமாகத்தான் ஜப்பான் கடந்த நவம்பரில் இராணுவத்திற்கும் போராளி அரக்கன் (ARAKAN) ராணுவத்திற்கும் இடையில் ஒரு அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியது.
மியான்மார் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும் ஜப்பான் இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக அறிக்கைகளை விட்டு சர்வதேச சமூகத்தை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஆரம்பத்தில் மிகவும் கடுமையாக இல்லாத ஜப்பானின் அறிக்கைகள், பிப்ரவரி 20ஆம் தேதி அமைதியாக போராடிய இரு போராட்டக்காரர்களை மியான்மர் ராணுவம் சுட்டு தள்ளிய பிறகு ராணுவத்தின் வன்முறையை எதிர்த்து கடுமையாக விமர்சித்தது.
மியான்மரில் சீனாவின் முக்கியத்துவம் மற்றும் பொருளாதார வலிமையை விட ஜப்பானின் வலிமை அதிகமாக உள்ளது. ஜப்பான் மியான்மரின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உதவி புரியும் வகையில், தேர்தல் சம்பந்தமான உபகரணங்களையும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களையும் அனுப்புவது, உள்ளூர் அரசாங்கங்களில் அதிகாரிகளின் திறன்களை அதிகரிப்பது, அதனுடைய நீதி மன்றங்களை உருவாக்க உதவி புரிவது, மேலும் நாட்டில் உள்ள சிறுபான்மை குழுக்களிடையே அமைதி ஒப்பந்தங்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
சீனா பலவித சிறுபான்மை குழுக்களின் ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்து வருடங்களில் ஜப்பான் அங்கு வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. எனவே மியான்மரிடம் ஜப்பான் அதிகபட்ச நம்பிக்கையை பெற்றுள்ளது.
இந்தியா இதுவரை வெளிப்படையாக ராணுவ ஆட்சியை கண்டனம் செய்வதை தவிர்த்து வந்துள்ளது. மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் பல காலத்து நிலையை இது பிரதிபலிக்கிறது. ஆனால் நாட்டில் மக்களாட்சியை நிறுவுவதே இந்தியாவிற்கு நல்லதாக இருக்கும்.
1988ல் மியான்மரின் ஜனநாயக இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததும், 1990 இல் நடந்த ராணுவ ஆட்சியை எதிர்த்தும் மியான்மரில் சீனாவின் கைகளில் தள்ளியதோடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மியான்மரின் எல்லைப்பகுதிகளில் ஆயுதப் போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.
இதன்பிறகு மியான்மரின் ராணுவத்துடன் இந்தியா நெருக்கமான தொடர்புகளை கொண்டது. இரண்டு நாடுகளுக்கு இடையில் வணிக மற்றும் பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வந்தது. நாட்டில் பல திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது.
மியான்மரின் தேர்தல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு நிதி உதவி அளித்துள்ளது. இது அங்குள்ள கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கும் உதவி புரிந்து வருகிறது.
இந்தியாவும் ஜப்பானும் இணைந்து QUAD நாடுகளின் உதவியுடன் மியான்மரில் ஒரு அமைதியான ஒரு தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது.
Reference: ORF