டிஜிட்டல் இந்தியா- ஆறு ஆண்டுகளில் ஒரு வெற்றிப் பயணம்!

Update: 2021-07-12 02:26 GMT

ஜூலை 1, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்பட்ட இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம், இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியத்துடன் தொடங்கப்பட்டது. இது ஒரு இமாலய முயற்சி. ஏனெனில் அப்போது 19% மக்கள் தான் இணையதள வசதியை பெற்றிருந்தனர். 15% மக்கள் தான் மொபைல் போன்களை உபயோகிக்கும் அணுகலைப் பெற்றிருந்தனர்.

ஆனால் இந்தத் திட்டம் உலகில் இந்தியாவில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியா சரியான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தியது. தற்போது ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பயணம் தனக்கேயுரிய பல ஏற்ற இறக்கங்களை பெற்றுள்ளது.

ஆதார் அட்டையை பயன்படுத்துவதில் உள்ள தனியுரிமை பிரச்சனைகள் குறித்து பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. (தீர்ப்புகள் ஆதாருக்கு சாதகமாக வந்துள்ளது). இது அரசாங்க திட்டங்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவின் கொரானா வைரஸ் தடுப்பு வியூகங்களில் ஒரு முக்கியமான பங்காற்றிய ஆரோக்கிய சேது செயலியில் இருந்த ஒரு பாதுகாப்பு குறைபாடு என பல வித தடங்கல்களையும் தாண்டி தான் டிஜிட்டல் இந்தியா திட்டம் முன்னேறி உள்ளது.

இந்தியாவில் அரசு அதிகாரிகளும் அவர்கள் துறைகளுமே தங்கள் திட்டங்களுக்கு பெரும் தடைக்கற்களாக எதிரிகளாகவும் இருப்பது பொதுவான ஒன்றாகிவிட்டது.

டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் இப்பொழுது எவ்வாறு உருவாக்கப்பட்டது?

டிஜிட்டல் இந்தியா, இணைப்பு திறன் மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டுவர முற்பட்டது. இதற்கு முன்னால் தேசிய மின் நிர்வாக திட்டம் (2006), தேசிய ஆப்டிகல் பைபர் நெட்வேர்க் (2011) மற்றும் UID (2009) ஆகிய திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 2510 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில், டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் மேட்டுக்குடியினருக்கு மட்டுமல்ல, ஏழை மக்களுக்குமானது என்றார். இந்த நாட்டின் தொலைதூர கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கூட நல்ல கல்வியை நாங்கள் வழங்க விரும்புகிறோம் என்றும், ஒவ்வொரு குடிமகனும் மொபைல் போனின் மூலம் தங்களது வங்கிக் கணக்கை இயங்குவதற்கும், அரசாங்கத்திடம் தொடர்பு கொள்வதற்கும், தங்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், பயணத்தின்போது வணிகத்தைத் தொடர்வதற்கும் வசதிகளை செய்யவேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்தார். இதற்காக நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த லட்சியம் மிகவும் உயர்வானது. இதற்கான தடங்கல்களும் எதிர்ப்புகளும் அதிகம். இந்தியாவில் பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, இணைத்து, டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஈடுபடும் அளவிற்கு திறன்களை உண்டாக்கி, அரசாங்கத்திடம் மக்கள் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றி, அரசாங்கத்தின் சேவைகள் மக்களைச் சென்றடையும் வழிமுறையை மேம்படுத்துவது ஆகிய பல சவால்களை எதிர்கொண்டது.

மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் நடைமுறை சிக்கல்களை சந்தித்தது. பல சமயங்களில் இது சட்டம் மற்றும் கொள்கை முடிவுகளில் இருந்த குறைபாடுகளாலும், பல சமயங்களில் மோசமான திட்டமிடல் மற்றும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதாலும் பின்னடைவை சந்தித்தது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதா சர்ச்சையில் சிக்கியது. ஆதார் தளம் சில மீறல்களால் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற சில விவகாரங்கள் டிஜிட்டல் இந்தியா திட்டங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியது. பாரத் நெட்வொர்க் இன்னும் பல பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

டெண்டர்களை வழங்குவதில் அரசு அதிகாரிகளால் ஏற்படும் தாமதங்களும் பலவித பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு சரியாக இல்லாததும் இதற்கு காரணங்களாகும். மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளன, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள்.

ஆனாலும், இந்தியாவின் 200 பில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரம் உலகத்தை அணுகுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். ஒரு கொடும் பெருந்தொற்றில் இருந்து இந்தியா வெளிவர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் வேளையில், அதன் டிஜிட்டல் வளர்ச்சி கதை உலக மேடையில் இந்தியாவின் பங்களிப்பின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.

இந்த பெருந்தொற்று ஊரடங்கு காலத்திலும் டிஜிட்டல் பண மாற்று முறைகள் ஆன்லைன் தளங்கள் ஆகியவை எந்த அளவு நமது வாழ்க்கையை ஓரளவு எளிதாக்கின என்பதும் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி கதைகளில் ஒன்றாகும். 

Tags:    

Similar News