வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்பில் கைவைக்க தடுமாறும் தி.மு.க அரசு - நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த திணறல்

வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்பில் இருந்த 1400 வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகம் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-09-13 12:48 GMT

வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்பில் இருந்த 1400 வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகம் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறப்பதாக புகார் எழுந்துள்ளது.


பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு காஞ்சிபுரம் நகரின் குறுக்கே வளைந்து, நெளிந்து செல்கிறது. நகரை ஒட்டி செல்வதால் கடந்த 30 ஆண்டுகளில் ஆற்றின் கரையோரங்களில் மெல்ல மெல்ல அதிகரித்த ஆக்கிரமிப்பு வீடுகள் நாளடைவில் ஆற்றுக்கு உள்ளேயே வீடுகள் முளைக்க துவங்கி விட்டன. இதன் காரணமாக வேகவதி ஆற்றில் தற்போது 1400 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன இதனால் ஆறு சுருங்கி காணப்படுகிறது.


இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருமழை காரணமாக ஆற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான வீடுகளுக்கு தண்ணீர் புகுந்தது ஆகையினால் இது போன்ற சூழல் அடுத்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக அப்போதைய கலெக்டர், சப் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.


தொடர்ந்து கீழ்கதிர் கிராமத்தில் 212 வீடுகள் 200 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் கட்டியது. அக்கிரமிப்பாளருக்கு வழங்க கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளை 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் திறந்து வைத்தார் இவர்களுக்கு வீடுகளை வழங்க ஆக்கிரமிப்பாளர்களுடன் 2020ல் அப்போதைய கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது வீடுகளின் மொத்த மதிப்பு 15 லட்ச ரூபாய் எனவும் ஆக்கிரமிப்பாளர்கள் 1.5 லட்சம் செலத்தினால் போதும் எனவும் தெரிவித்தனர். ஆனால் அந்த பங்களிப்பு தொகையும் செலுத்த ஆக்கிரமிப்பாளர்கள் மறுத்துவிட்டனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் அன்பரசன் வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து பின் பங்களிப்பு தொகை 1,00,000 செலுத்த வங்கி கடன் ஏற்பாடு செய்யப்படும் என்றார். ஆனால் மூன்று மாதம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஜூன் 11ம் தேதி வேகவதி ஆறு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் தயாராகினர் ஆனால் நடவடிக்கை எடுக்க ஏனோ தயங்கி விட்டுவிட்டனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் உன்னித்து கவனித்து வரும் வேளையில் வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகியில் இருகுறித்து பெயர்களிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, 'ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அரசு தயங்குகிறது' என தெரிவித்தார் நீதிமன்ற உத்தரவை தி.மு.க அரசு செயல்படுத்த தயங்குகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


Source - Dinamalar

Similar News