இந்துக்களே இல்லாத இந்து சமய அறநிலையத்துறை குழு : கோவில் வருமானத்தில், பகுமானமாய் கல்லூரி கட்டும் தி.மு.க அரசு !
தமிழகத்தில் இந்து சமய அற நிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் 44,294 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோயில்கள் உள்ளன. அதில் வருடாந்திர வருமானம் ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கும் மேல் உள்ள கோவில்களின் எண்ணிக்கை மட்டுமே 2,246க்கு மேல் உள்ளது. குறைவாக கணக்கிட்டுப் பார்த்தாலும், வருடம் 200கோடிக்கும் மேல் வருமானம், தமிழக கோவில்களில் இருந்தே அரசுக்கு செல்கிறது. இதில் சொற்பனமான தொகை மட்டுமே கோவில் பராமரிப்புக்கு ஒதுக்கப்படுகிறது. இது தவிர கோவில் நிலங்கள் முறைகேடாக தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு, அவற்றை மாற்று மதத்தினரும் அனுபவிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக கோவில் நிலங்களில் கல்லூரி கட்ட ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே பல ஆயிரம் கோடி மதிப்புடைய கோவில் நிலங்கள், கல்லூரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதாக திமுகவினர் கூறி வரும் நிலையில், மீண்டும் இந்துக்களின் மத விவகாரத்தில் அரசு தலையிடுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் என்ன ஆனது? இது நாள் வரை யார் அனுபவித்தனர்?
ஆவணங்கள் படி, இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 4,78,283.59 ஏக்கர் பரப்பளவுடைய நிலங்கள் உள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை 1,23,729 குத்தகைதாரர்கள் பயிர்செய்து வருகின்றனர். இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களுக்கு வரவேண்டிய குத்தகை நிலுவைத்தொகைகளை வசூல் செய்யவும், விவசாய நிலங்களுக்கு நியாய வாடகை நிர்ணயிக்கவும், குத்தகை செலுத்த மறுக்கும் குத்தகைதாரர்களை வெளியேற்றவும், தமிழ்நாடு பொது பொறுப்புரிமை விவசாய நிலங்கள் ஒழுங்குபடுத்தும் மற்றும் மேலாண்மை சட்டம், 1955 (TamilNadu Cultivating Tenants Protection Act, 1955)-ன்படி கீழ் கண்ட இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேற்கண்ட வருவாய் நீதிமன்றங்களில் 13260 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டள்ளன. அதில் 5860 வழக்குகளுக்குதீர்வுகாணப்பட்டு, ரூ.18.59 கோடி குத்தகை நிலுவைத் தொகை வசூலிக்க உத்தரவு பெறப்பட்டுள்ளன. அதிலும் ரூ.2.77 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?
திருக்கோயில் நிலங்கள் குத்தகை தொடர்பாக வருவாய் நீதினற்ங்களில் நிலுவையாக உள்ள வழக்குளை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் நில உடைமைப்பதிவு மேம்பாட்டுத்திட்ட செயலாக்கத்தின் போது தனிப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையை மாற்றி, மீண்டும் அந்தந்த திருக்கோயில்களின் பெயரிலேயே பட்டா பெறுவதற்காக மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள் தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான வருவாய் துறை ஆவணங்களில் தவறாக பதியப்பட்டுள்ள விவரங்களை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.