அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் ட்வீட்டை டெலீட் செய்ததன் பின்னணி!
பிரதமர் நரேந்திர மோடி பற்றி தரக்குறைவான தகவல்களை கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் திமுக அமைச்சர்.
திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மதிப்பிற்குரிய ஒரு பதவியில் இருக்கிறார் என்பது கூட பார்க்காமல் மிகவும் கண்ணிய தன்மை குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாக சமூக இணையதளவாசிகள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் அவரின் பழைய ஆடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். இந்த ஒரு செய்தியும் தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது.
மே 28 அன்று, பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார் மற்றும் வரலாற்று செங்கோலை நிறுவினார், அதே நேரத்தில் தமிழ் ஆதீனங்கள் பாராளுமன்றத்திற்குள் தேவாரம் பாடல்களைப் பாடினர். பாராளுமன்றத்தில் செங்கோல் ஏற்றப்படுவதற்கு முன்பு பூசாரிகள் மற்றும் ஆதீனங்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஆதீனங்களிடமிருந்து செங்கோலைப் பெறுவதற்கு முன்பு, மரியாதைக்குரிய அடையாளமாகவும், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் செங்கோலை வணங்கினார். பிரதமர் மோடி செங்கோல் முன் விழுந்து வணங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வரும் நிலையில், திமுகவின் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் மோடியை இழிவாகப் பேசினார். இந்த ஒரு நடவடிக்கை காரணமாக பாஜக மத்தியில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தரையில் படுத்து வணங்கும் படத்தை பதிவிட்டு, மூச்சு இருக்கா? மானம் ??ரோஷம் ??? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த படத்தால் அதிருப்தி அடைந்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்து இருக்கிறார்கள். இது பற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அமைச்சர் மனோதங்கராஜ், பிரதமர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்த நபரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.