இந்து சமய அறநிலையத்துறை பணத்தில் தி.மு.க'வை வளர்த்தெடுக்க ஆர்வம் காட்டும் ஸ்டாலின் !
இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தை தன் இஷ்டம்போல் செலவு செய்து அதற்கு தி.மு.க லேபிள் ஒட்டி வருகிறது ஸ்டாலின் தலைமையிலான இந்து மத வெறுப்பு அரசு.
தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 6 மாதங்களாக எந்த துறையை கவனம் செலுத்துகிறதோ இல்லையோ இந்து சமய அறநிலையத்துறையை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறது. இதற்கு கோவில்கள் மீதோ அல்லது இந்து சமய மக்கள் மீதோ உள்ள அக்கறை என நினைத்துவிட வேண்டாம், தி.மு.க'விற்கு தோல்வி பயம் என்றால் என்னவென்று காட்டிய இந்துக்கள் வாக்கு வங்கியும், தமிழகத்தில் பெரும்பாலான சொத்துக்களையும், வருமானத்தையும் தன்னகத்தே அடக்கியுள்ள இந்து சமய கோவில்களுமே காரணம்.
இதுதான் தி.மு.க'விற்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அதாவது இந்து சமுதாயத்திற்கு நாங்கள் எதிரி அல்ல என வரும் தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்யவும், எண்ணிக்கையில் அதிகளவுள்ள இந்து சமய கோவில்களின் வருமானத்தை எடுத்து செலவு செய்து அதில் தி.மு.க முத்திரையை குத்தவும் என தனது அரசியல் விளையாட்டை இந்து சமய கோவில்களின் மீது காட்டி வருகிறது. இதன் வெளிப்பாடே தி.மு.க'வின் அறநிலையத்துறை மீதான திடீர் கரிசனத்திற்கு காரணம். இல்லையெனில் தி.மு.க எட்டி கூட பார்க்காது.
இந்ந நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் வருமானத்தை கல்லூரிகள், கருணை இல்லங்கள், அன்னதானக் கூடங்கள், சமய நூலகங்கள், தங்கும் விடுதிகள், அர்ச்சகர்- ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், தவில், நாதஸ்வர இசைப்பள்ளிகள் என வாரி இறைத்து அதம் மேல் தி.மு.க கொடியை நட்டு வைக்க திராவிடர் கழக பின்புல தி.மு.க அரசு துடிக்கிறது. இவை அனைத்துமே மக்களுக்கு பயன்படும் என்றால் இந்து சமய மக்கள் கட்டாயம் ஏற்று கொள்வர், ஆனால் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்று தி.மு.க'வை வளர்தெடுக்க, நற்பெயர் வாங்க, திராவிடர் கழக பின்புல கடவுள் மறுப்பு இயக்கங்கள் வளர பரம்பரை பரம்பரையாக இந்து சமுதாய மக்கள் அறித்த நன்கொடைகளில் வளர்ந்த அறநிலையத்துறை சொத்துக்களை தி.மு.க கபளீகரம் செய்வது போல் அப்படியே உபயோகித்து வளர்கிறது.