டெல்லியில் நிபந்தனையற்ற மன்னிப்பை எழுதி கொடுத்துவிட்டு ஓடிவந்த தி.மு.க ஆபாச பேச்சாளர் சைதை சாதிக்
தி.மு.க'வின் ஆபாச பேச்சாளர் சைதை சாதிக் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் காலில் விழாத குறையாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு எழுத்து பூர்வமாக கடிதம்
தி.மு.க'வின் ஆபாச பேச்சாளர் சைதை சாதிக் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் காலில் விழாத குறையாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு எழுத்து பூர்வமாக கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு ஆளை விட்டால் போதும் என பின்னங்கால் பிடறியில் அடிக்கும் அளவிற்கு ஓடி வந்துள்ளார்.
திமுக என்றாலே ஆபாசப்பேச்சு, அருவருப்பான வார்த்தைகள் தான் மக்கள் மக்கள் மத்தியில் முதலில் ஞாபகம் வரும், அந்தளவிற்கு அண்ணாதுரை முதல் இன்றைய பட்டத்து இளவரசர் உதயநிதி வரை பொதுவெளியில் மக்கள் மத்தியில் பெண்களை அவதூறாக பேசிய வரலாறு இருக்கிறது. அவர்களின் அவதூறு பேச்சை கேட்டு ஆர்வமுடன் கட்சியில் இணைந்தவர்கள் பல பேர் அந்தவகையில் குறிப்பிடத்தக்க ஆள்தான் சைதை சாதிக், இந்த சைதை சாதிக் பாஜகவில் உள்ள பெண்களை பற்றி முகம் சுளிக்கும் வகையில் பேசிய விவகாரம் தமிழக பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாஜகவில் உள்ள மகளிர் பற்றி குறிப்பாக நடிகை குஷ்புவை பற்றி மேடையில் பொதுவெளியில் மக்கள் மத்தியில் ஆபாசமாக பேசிய சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து தரப்பிலிருந்து எதிர்ப்புகள் குவிந்தன. திமுகவின் வழக்கமான பெண்கள் மீதான ஆபாச பேச்சு என்றாலும் இந்த முறை எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது, குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் உள்ள மகளிர் அணி திரண்டு போராடினர். ஆனால் ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளரை விட்டுவிட்டு அதற்க்கு நியாயம் கேட்டு போராடிய அண்ணாமலை மற்றும் பெண்களை திமுக அராஜகமாக கைது செய்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழக பெண்கள் திமுக மேல் கோபமடைந்தனர், என்னையா பேசின ஆள் நல்லா வெள்ளை வேஷ்டி சட்டை ல சுத்துறார், அதற்க்கு நியாயம் கேட்டு போராடின ஆளை கைது செய்துளீர்களே என அனைத்து தரப்பு மகளிர் கோபமடைந்தனர். இந்த சம்பவத்தில் மகளிர் அனைவரும் ஒன்று கூடுவதை பார்த்த திமுக அரசு சற்று மிரண்டு போனது, திமுக ஆட்சியில் இல்லாத சமயத்தில் மட்டும் பெண்ணுக்கு நியாயம், சம உரிமை பேசி அரசியல் செய்து வரும் கனிமொழியோ இப்படியே விட்டா வேலைக்காகாது என நிலைமையை புரிந்துகொண்டு, தனது ட்விட்டர் பதிவில், 'இதுகுறித்து ஒரு பெண்ணாகவும் சக மனிதராகவும் எதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்' என குஷ்புவிடம் அப்பொழுதே மன்னிப்பு கேட்டார்.