'இந்திய துணை கண்டத்திலேயே எங்கள் முதல்வரால்தான் முடியும் தெரியுமா?' - ஸ்டாலினை புகழ்வதுபோல் வம்பில் மாட்டிவிட்ட ஆ.ராசா

'இந்திய துணை கண்டத்திலேயே எங்கள் முதல்வர் ஸ்டாலினால் தான் முடியும்' என முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசுகிறேன் பேர்வழி என ஆண்டிமுத்து தி.மு.க'வை வம்பில் மாட்டியுள்ளார்.

Update: 2023-01-02 07:31 GMT

'இந்திய துணை கண்டத்திலேயே எங்கள் முதல்வர் ஸ்டாலினால் தான் முடியும்' என முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசுகிறேன் பேர்வழி என ஆண்டிமுத்து தி.மு.க'வை வம்பில் மாட்டியுள்ளார்.

தி.மு.க'வில் உள்ள பேச்சாளர்களில் முக்கியமானவர் ஆண்டிமுத்து ராசா இவர் தி.மு.க'வின் துணை பொதுச் செயலாளராகவும் மற்றும் நீலகிரி தொகுதி எம்.பி ஆகவும் இருந்து வருகிறார். ஆண்டிமுத்து ராசா அவ்வப்போது ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்துவார், பெரும்பாலும் அவர் பேசியது தி.மு.க'விற்கு எதிராகவே முடியும் குறிப்பாக 'இந்துக்களுக்கு எதிரி அல்ல என தி.மு.க' ஒரு புறம் முதல்வர் ஸ்டாலின் தரப்பு கையில் வேலை எல்லாம் தூக்கி மக்கள் மத்தியில் நாங்கள் உங்களுக்கு எதிரி அல்ல என புரிய வைத்தாலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்துக்களை கேவலமாக விமர்சித்து அந்த பிம்பத்தை எல்லாம் உடைத்து காலி செய்து விடுவார் ஆண்டி முத்து ராசா.

இதன் காரணமாகவே பெரும்பாலும் ஆண்டிமுத்து ராசாவே பேசுவதை பற்றி தி.மு.க எப்போதும் ஒரு கலக்கம் கொள்ளும்! இவ்வளவு ஏன் கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மேடையில் இருக்கும் பொழுது ஆண்டிமுத்து ராசா அவர்களை மேடையில் பேச அனுமதிக்கவில்லை காரணம் ஆண்டிமுத்து ராசா மேடையில் சிறப்பாக பேசுகிறேன் என்ற பெயரில் எதாவது சர்ச்சை கருத்தை கூறிவிட்டால் பிறகு முதல்வர் அதனை மேடையில் மறுக்கவும் முடியாது, ஆதரிக்கவும் முடியாது. பிறகு மக்கள் மத்தியில் மேடையில் முதல்வர் ஸ்டாலின் ஆண்டிமுத்து ராசாவை பேச வைத்து வேடிக்கை பார்க்கிறார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றிவிடும் பிறகு அதனை மாற்ற தி.மு.க பெரும் பாடுபாடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆண்டிமுத்து ராசா பேசுகிறேன் பேர்வழி என்ற பெயரில் தி.மு.கவை புகழ்கிறாரா? அல்லது வம்பில் மாட்டி விடுகிறார்கள் என்று தெரியாத அளவிற்கு ஏதாவது பேசி விடுவார். அந்த வகையில் தற்போது சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் தி.மு.க எம்பி ஆண்டிமுத்து முத்து ராசா பேசியதாவது, 'இந்துத்துவாவின் ரெய்டுக்கு பயந்து மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜகன்மோகன் உள்ளிட்ட பல தலைவர்கள் பா.ஜ.க'வை எதிர்ப்பதில்லை இந்திய துணைக்கட்டத்தில் இந்துத்துவாவை எதற்கும் சக்தி படைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் 2024 ஆம் ஆண்டு முழு அமைச்சரவை பட்டியலை மட்டுமல்ல பிரதமர் யார் என்பது வரை பட்டியல் தயாரிக்கப் போவதும் தலைவரின் செனடாப் இல்லம் தான்' என கூறினார். இவர் இவ்வாறு பேசியது இந்திய அளவில் இருக்கும் பா.ஜ.க எதிர்ப்பு மாநில கட்சிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

காரணம் மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெகன்மோகன் ஆகியோரெல்லாம் வரும் தேர்தலில் பா.ஜ.க'விற்கு எதிர்ப்பாக கூட்டணி அமைத்து அதில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் அல்லது வேறு யாராவது ஒரு பொதுவான வரை வேட்பாளராக அறிவிக்கலாம் என அரசியல் களம் சென்று கொண்டிருக்கையில் மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜகன்மோகன் போன்றோர் பா.ஜ.க பயப்படுகிறார்கள் எனக் கூறிய ஸ்டாலினை புகழ்ந்து பேசியது மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெகன்மோகன் ஆகியோரை மட்டம் தட்டி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்ததுபோல் ஆகிவிட்டது.

போதா குறைக்கு கடந்த முறை தேர்தலில் முதல் ஆளாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மேடையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அறிவித்தது ஸ்டாலின். இந்த நிலையில் இப்பொழுது இவர்களை மட்டம் தட்டி ஸ்டாலினை புகழ்ந்து பேசியது கண்டிப்பாக இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளுக்கு கண்டிப்பாக அதிருப்தியை ஏற்படுத்தும்.

அப்படி பிற மாநில கட்சிகளுக்கு தி.மு.க'வின் மீது வெறுப்பு ஏற்படும் பட்சத்தில் காங்கிரஸ் தி.மு.கவை கூட்டணியில் வைத்திருக்கும் பொழுது இவர்கள் கண்டிப்பாக தி.மு.க'வுடன் கூட்டணி சேர யோசிப்பார்கள். மேலும் அகில இந்திய அளவில் பா.ஜ.க'வின் எதிர்ப்பாளர்களை ஒன்று இணைக்கும் வகையில் 100 நாட்களை கடந்து ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் பா.ஜ.க'வை எதிர்க்கும் சில பிராந்திய கட்சிகளை அரவணைத்து அவர் வரும் 2024 தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார், அவ்வாறு சந்திக்க அவர் திட்டமிட்டு வரும் வேலை செய்து கொண்டிருக்கையில் வரும் தேர்தலில் மக்களவைத் தேர்தல் முழு அமைச்சரவை பட்டியலில் தயாரிக்கப் போவது செனடாப் இல்லம்தான் என பேசியது தி.மு.க'வை புகழ்ந்தது போல் தெரியவில்லை தி.மு.க'வை நெருங்கும் பாஜக எதிர்ப்பு கட்சிகளை தி.மு.க'விடமிருந்து விலக்கி வைப்பது போலவே தெரிகிறது.

எப்படியோ ஆண்டிமுத்து ராசா பேசுவது தி.மு.க'வை புகழ்வது போல் ஒரு சிலருக்கு தெரிந்தாலும் அது உண்மையிலேயே தி.மு.க'வை பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகளிடமிருந்து இணைய விடாமல் தனியே பிரித்து வைப்பது போன்று தெரிவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். காரணம் பா.ஜ.க போன்ற பெரும் கட்சியை எதிர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கில் இருக்கும் பொழுது அது எல்லாவற்றிற்கும் நாங்கள் தான் தலைமை தாங்குவோம் என்பது போன்ற தெனாவட்டு மனப்பான்மை ஆண்டிமுத்து ராசாவின் பேச்சில் பிரதிபலிப்பாக இப்பொழுதே பேச துவங்கி விட்டனர்.


Source - Asinaet News

Similar News