துணிவாவது, வாரிசாவது நாங்கதான் வசூலில் டாப் தெரியுமாடே? - மலைக்க வைக்கும் டாஸ்மாக் வசூல்!
தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் வாரிசு துணைவு என இரு படத்தில் யார் படம் கலெக்ஷன் அதிகம், வாரிசா? துணிவா? என போட்டி போட்டுக்
தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் வாரிசு துணைவு என இரு படத்தில் யார் படம் கலெக்ஷன் அதிகம், வாரிசா? துணிவா? என போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இருவரையும் தாண்டி டாஸ்மாக் அதிக கலெக்ஷனை அள்ளி லாபம் பார்த்துள்ளது.
தற்பொழுது தமிழகத்தில் மதுபான கடைகள் தமிழக அரசின் வசம் இருக்கிறது, அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய துறைகளில் டாஸ்மாக் இருக்கக்கூடிய ஆயத்துறை தீர்வு முன்னிலை வகிக்கிறது. இதன் அமைச்சராக செந்தில் பாலாஜி சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறார்! அதாவது அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் இவரது துறைக்கு நிகர் வேற எந்த துறையும் கிடையாது, மதுபாட்டில்கள் விற்பனை, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக விற்பனை, மேலும் அந்த டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பார்கள் ஏலம் விடப்படும் ஏலத்தொகை இது போன்ற கலெக்ஷன்களை அரசுக்கு வருவாய் கொழிக்கிறது.
இன்று போதையை ஒழித்தே தீருவோம் என முதல்வர் கூறினாலும் இந்த பக்கம் டாஸ்மாக் கடையை திறந்து லாபம் பார்க்கவே செய்கிறது அரசு, இன்றைய தேதியில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை கூட விடுமுறை விட எந்த ஒரு பேரிடர் காலம் வந்தாலும் அரசு தயங்காது! அது மழைக்காலம் ஆனாலும் சரி, கொரோனா போன்று நோய் தொற்று காலமோ எதுவானாலும் கல்விநிலையங்களை மூட துளியும் அரசு தயங்காது. ஆனால் டாஸ்மாக்கை இரண்டு தினங்கள் மூடுவதென்றால் அரசின் அத்தனை துறையும் அலறி அடித்துக் கொண்டு வேலை செய்யும்!
காவல்துறை பந்தோபஸ்து கொடுக்கும், வருவாய்த்துறை முறையாக கடைகள் இயங்குகிறதா என பார்க்கும், அரசு அதிகாரிகள் கடைக்கு சரியாக மதுபான பாட்டில்கள் சென்று சேர்ந்தனவா என தீவிரமாக கண்கணிப்பார்கள். ஒருவேளை மழைக்காலம் என்றால் கூட ஒரு பகுதியில் சாலை துண்டானால் கூட அந்த பகுதிக்கு மழை நிவாரண பணிகள் அல்லது உணவுப் பொருட்கள் சென்று மக்களுக்கு சேருகிறதா இல்லையா என பார்க்கும் முன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மார்க்ளுக்கு பத்திரமாக நனையாமல், உடையாமல் பாட்டில்களை கொண்டு சேர்ப்பது எப்படி என அரசு யோசித்து செயல்பட்டு வருகிறது.