செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்த காரணம் தெரியுமா? இவ்ளோ சின்ன விஷயத்துக்கா பாக் கோபம்?
சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நேற்று தொடங்கியது.அடுத்த மாதம் 10- ஆம் தேதி வரை இந்த போட்டி தொடர்ந்து நடக்கிறது.
சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நேற்று தொடங்கியது.அடுத்த மாதம் 10- ஆம் தேதி வரை இந்த போட்டி தொடர்ந்து நடக்கிறது. இந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளுமாறு அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது.
ஒலிம்பியாட் ஜோதியை காஷ்மீர் வழியாக எடுத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது இந்த போட்டியில் பங்கேற்பதில்லை என்று திடீரென பாகிஸ்தான் முடிவு எடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே வந்த பின்னர் இதுபோன்ற முடிவை பாகிஸ்தான் எடுத்து மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வை அரசியல் ஆக்கியது மிகவும் துரதிஷ்டவசமானது என கூறினார்.
மேலும் காஷ்மீரும்,லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்தன .இப்போதும் இருக்கின்றன எப்போதும் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.