'இழுத்து மூடு அம்மா உணவகத்தை, வெளியில் தள்ளு வேலை செய்தவர்களை' - நஷ்டக்கணக்கு காட்டி தி.மு.க ஆடும் நாடகம்

அம்மா உணவக ஊழியர்களை நீக்கி அம்மா உணவகத்தை இழுத்து மூடும் திமுக அரசின் செயல் அம்பலமாகியுள்ளது.

Update: 2022-12-06 13:43 GMT

அம்மா உணவக ஊழியர்களை நீக்கி அம்மா உணவகத்தை இழுத்து மூடும் திமுக அரசின் செயல் அம்பலமாகியுள்ளது.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரிந்த 60 வயதுக்கு மேற்பட்ட 130 ஊழியர்கள் திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நஷ்டத்தை கருத்தில் வைத்து நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டன. அரசு மருத்துவமனை உட்பட 47 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில் காலையில் இட்லி ஒரு ரூபாய், பொங்கல் ஐந்து ரூபாய், மதியம் சாம்பார், கருவேப்பிலை, எலுமிச்சை சாதம் ஐந்து ரூபாய், தயிர்சாதம் 3 ரூபாய், இரவு 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு வழங்கப்பட்டன.

ஏழை, எளிய மக்கள், தினசரி கூலி தொழிலாளிகள், சாலை ஓரத்தில் வாழும் ஆதரவற்றவர்கள் போன்றோர்களுக்கு அம்மா உணவகம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும் இது மிகப்பெரிய அட்சய பாத்திரமாக விளங்கி பலரின் பசியை போக்கியது. கொரோனா காலத்தில் பசியை போக்கும் இடமாக அம்மா உணவகம் விளங்கியது, தினமும் 150 முதல் 5000 ரூபாய் வரை ஒரு உணவகத்தில் விற்பனை ஆகி வந்தது.

மொத்தம் 4000 மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர். மாதம் 15,000 ரூபாய் விற்பனையானாலும் பத்து கோடி ரூபாய் வரை செலவாகிறது. எனவே இந்த திட்டம் பசியை மக்களுக்கு ஆற்றும் திட்டம் என்பதால் இதில் லாப நோக்கம் இல்லாமல் அரசால் பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு நீர்நிலை, மெட்ரோ ரயில் நிலையம், வடிகால் மீது கட்டப்பட்டது எனக் கூறி 7 அம்மா உணவகங்களை மூடியது அரசு. தற்போது செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களும் இட்லி, பொங்கல், சப்பாத்தி போன்றவைகளை தனியார் ஹோட்டல்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறி புகார் எழுந்துள்ளது.

இதனால் அம்மா உணவகத்தை நம்பி உணவிற்காக உள்ளவர்கள் ஏமாற்றம் அடைவதாக கூறப்படுகிறது. இதன்படி ஆண்டுதோறும் 120 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது எனவும் தற்போது வரை 756 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு நிலை குழு தலைவர் தனசேகரன் சமீபத்தில் மாநகராட்சி மாநகர கூட்டத்தில் கூறினார்.

மேலும் 500 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகும் அம்மா உணவகங்களை மூடி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் எனவும் தி.மு.க கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக கூறி வந்தனர். அம்மா உணவ ஊழியர்களுக்கு தினமும் 300 ரூபாய் மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் ஊழியம் வழங்கப்படுகிறது. செலவை குறைக்க ஊழியர்களை நீக்கம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததால் சுழற்சி முறையில் வார விடுமுறை ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது.

தற்பொழுது இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட 130 பேர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒன்றாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிக ஊழியர்களை நீக்கிய மண்டலமாக அம்பத்தூர், ராயபுரம் உள்ளது. இதனால் இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி நீக்கம் செய்திருக்கம் என கோரிக்கையை எழுந்துள்ளது.

பணி நீக்கம் செய்வதற்கான எந்தவித முன்னறிப்பும் செய்யாமல் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இவர்கள் வேலைக்கு வந்த போதுதான் இவர்கள் நீக்கப்பட்ட விவரம் தெரிந்தது, விசாரித்த பொழுது உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவில் நீக்கம் செய்ததாக கூறியுள்ளார்கள். கணவன், பிள்ளைகள் கைவிட்டாலும் இத்தனை ஆண்டுகளாக உணவகத்தை நம்பி சொந்த காலில் வாழ்ந்து வந்த இந்த முதியவர்கள் தற்பொழுது இரக்கமில்லாமல் நீக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகள் திருமணம், பேரப்பிள்ளைகள் வேலை, கல்விவாய்ப்பு என இவர்கள் வருமானத்தை நம்பி இருந்த அனைத்தும் இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்த 60 வயதிற்கு மேல் இவர்களுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? அதிகாரிகள் இவர்களை மீண்டும் வேளையில் நியமிக்க வேண்டும் என நீக்கப்பட்ட ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் தி.மு.க அரசு இவர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்பதாகவும் இல்லை மேலும் நீக்கப்பட்ட அவர்களுக்கு எந்த விதமான மாற்றுப்பணியும் பணியும் ஏற்பாடு செய்து தராதது அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.


Source - Junior Vikatan 

Similar News