திராவிடம் என்பது பித்தலாட்டம் - உருவானது திராவிடத்திற்கு எதிரான மிகப்பெரிய அமைப்பு

தமிழகத்தில் திராவிடத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Update: 2022-10-19 14:36 GMT

தமிழகத்தில் திராவிடத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக திராவிட மாடல் குறித்து முதலமைச்சர்ம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ'க்கள் மற்றும் தி.மு.க'வின் கூட்டணி கட்சிகள் பேசி வருவதும் இதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட வலதுசாரி தலைவர்கள் எதிர் கருத்து தெரிவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் திராவிடம் மாடல் தத்துவங்களால் வட மாநிலங்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்டாலின் என ஆ.ராசா கருத்தும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவும் 'தமிழில் எழுத தெரியாத தமிழர்களை உருவாக்கி இருக்கின்ற ஒரு ஆட்சி திராவிட மாடல், வெறும் பேச்சு மொழியாக தமிழை ஆக்கி இருக்கிற அந்த சக்தி இந்த திராவிட இயக்கங்கள் தான்' என பதிலளித்திருந்தார். இதேபோல் சமூக வலைதளங்களில் திராவிட மாடல் அரசு குறித்து உங்களில் ஒருவன் பதில்கள் என்ற தலைப்பில் பொதுமக்களின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார்.

இந்த சூழலில் புரட்சித்தமிழகம், நீலப் புலிகள் இயக்கம், செடியூல்டு ஐக்கிய முன்னணி, இரட்டைமலை சீனிவாசன் பேரவை உள்ளிட்ட 56 சிறு இயக்கங்கள் ஒன்றிணைந்து திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு என ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து சென்னையில் இந்த கூட்டமைப்பை அறிமுகப்படுத்தி புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'திராவிட ஆட்சியாளர்களால் பட்டியலின சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. திராவிட ஆட்சியாளர்களால் எங்கள் சமூக தலைவர்களான அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் வரலாறு மறைக்கப்படுகிறது. இவர்களை பொதுவெளியில் கூட திராவிட இயக்கத்தவர்கள் யாரும் பேசியதில்லை பட்டியல் சமூகத்தவர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வியல் முன்னேற இதுவரை திராவிட மாடல் அரசுகள் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை' என பேசினார்.

மேலும் தொடர்ந்த அவர், 'இழந்த வரலாற்றை மீட்டெடுக்க மக்களுக்கு திராவிடத்திற்கு எதிரான புரிதலை உருவாக்க இருக்கிறோம். பட்டியலின மக்கள் தீண்டாமை கொடுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள். அமைச்சர்கள் கூட வெளிப்படையாக பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். ஆனால் முதல்வர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை! திராவிடன் என்ற பெயருக்கு பின்னால் எங்களின் தமிழன் என்று அடையாளத்தை மறைக்க பார்க்கிறார்கள். எனவே மாவட்டம் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடங்க இருக்கிறோம்' எனவும் இந்த நிகழ்ச்சியில் கூறினார்.

திராவிட மாடல் என்ற பெயரில் இங்கு சிலர் நடத்தும் பித்தலாட்டங்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. மக்கள் மத்தியில் இந்த அமைப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



Source - Junior Vikatan  

Similar News