மின் சட்ட திருத்த மசோதா - எதிர்ப்புக்கான காரணமும், மசோதாவின் தேவையும்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, எதனால் என்று பார்க்கலாம்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, எதனால் என்று பார்க்கலாம்.
மின்சார சட்ட திருத்த மசோதா தனியார் மின் விநியோகத்திற்கு வழி வகுப்பதாகவும், இதனால் அரசு மின்வாரியத்தின் கூட்டமைப்பில் தனியார் பெரு நிறுவனங்கள் பெரும் லாபம் அடையும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மின்விநியோகம் தனியார் மையமானால் வீடுகளுக்கான மானியம் கிடைக்காது எனவும் மின் இணைப்பிற்கான கட்டணம் உள்ளிட்டவை உயரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் கூறுகிறார்கள் மேலும் ஏழைகளுக்கு குறைந்த கட்டணம் விவசாயத்திற்கு இலவச மின்நினியோகம் உள்ளிட்டவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த ஜூலை 31ம் தேதி பிரதமர் மானியம் மற்றும் இலவசம் வழங்குவது இந்திய அரசியலின் மோசமான கலாச்சாரமாக இருக்கிறது என குறிப்பிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது, மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, 'மின்சார தொகுப்புக்கு பல்வேறு மாநிலங்கள் ஒரு லட்சம் கோடிக்கு மேல் பாக்கி வைத்திருக்கும் செய்தி அறிந்தால் மக்கள் ஆச்சரியமடைவர், சாமானிய மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும் போது மாநிலங்கள் செலுத்த மறுப்பது வியப்பாக இருக்கிறது' எனவும் பிரதமர் மோடி கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மின்வாரியங்களால் மத்திய அரசின் தொகுப்புக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வருவது புதிதாக மின்வாரியங்களை அமைக்கவும் அவற்றின் மூலம் இதுபோன்ற நிலுவைத் தொகைகள் இல்லாமல் மத்திய அரசுக்கு சரியான தொகை வழங்க முடியும் என்பதையும் தொலைநோக்கு பார்வையாக வைத்து மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.