அமைச்சர் செந்தில் பாலாஜியை நெருங்கும் அமலாக்கத்துறை - விரிவான பின்னணி என்ன?
அ.தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அந்த சமயத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அந்த சமயத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காலத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது தங்களையே மனுதாரராக சேர்த்துக்கொள்ள சொல்லி அமலாக்கத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அமலாக்கத்துறைக்கும் நடக்கும் களேபரத்தின் பின்னணி இதோ! 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி! அப்போது அரசு போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் போன்ற வேலைகளை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அருள்மொழி என்பவர் 2018 ஆம் ஆண்டில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அடுத்த நாளே செந்தில் பாலாஜி, அசோக்குமார், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் அருள்மணி, முத்தையா, முருகேசன், வேணுகோபால், குமார், சரவணன், வேலாயுதம் உள்ளிட்ட 14 பேர் பாதிக்கப்பட்டவர்களாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது வழக்கு தொடர்ந்தவரும் மூன்றாவது குற்றவாளிமான சண்முகம் தங்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு விட்டதாக சொன்னதை எடுத்து 2021 ஆம் ஆண்டில் அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.