மாலை கருணாநிதி சிலை திறப்பு விழா - இன்றும் வெங்கைய்யா நாயுடு முன்னிலையில் திராவிட கதைகள் பேசுவாரா முதல்வர் ஸ்டாலின்?

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இன்று கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

Update: 2022-05-28 01:45 GMT

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இன்று கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார்.

அதன்படி 1.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது சிலையை வடிவமைக்கும் பணிகள் சிற்பி தீனதயாளன் தலைமையில் நடைபெற்றது.

இரண்டு டன் எடை கொண்ட இந்த சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலையை வடிவம் போன்றே இருக்கும், 16 அடி உயரம் கொண்டது.

இந்த நிலையில் இன்று மாலை 5:30 மணி அளவில் சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த சிலையை திறந்து வைக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகை புரிகிறார் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மற்றும் தி.மு.க சார்பில் நடைபெறுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வருகை புரிந்த அரசு நிகழ்ச்சியில் திராவிட மாடல், சமூகநீதி என தன் வழக்கமான கதைகளை பேசிய ஸ்டாலின் இன்று கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் அதே கதைகளை பேசுவாரா ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

Similar News