மத்திய அரசின் தலைமை வகிக்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாடு - தரவரிசையில் சறுக்கிய பின்னணி!

Update: 2022-07-05 05:25 GMT

சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் 2021 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் 3-ம் பதிப்பின் முடிவுகளை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதுதில்லியில் வெளியிட்டார்.

தரவரிசைக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், சிறந்த செயல்திறன், முன்னணி செயல்திறன், தலைமை வகிக்கும் மாநிலங்கள், ஆர்வமுள்ள மாநிலங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு மாநிலங்கள் என 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் குஜராத், கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநிலமான மேகாலயா உள்ளன. கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, மற்றும் தெலங்கானா மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் ஆகியன உயர்ந்த செயல்திறன் பட்டியலில் உள்ளன.

அஸ்ஸாம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம், அந்தமான், நிகோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகியவை தலைமை வகிக்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்களில் சண்டிகர், தாத்ரா, நாகர் ஹைவேலி, டாமன் டையூ, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, புதுச்சேரி மற்றும் திரிபுரா ஆகியவை ஆர்வமுள்ள மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.

ஆந்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்களும், மிசோராம், லடாக் ஆகியவை வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றன.

Input From: NewsOnair

Similar News