'பட்டாசு வெடியுங்கள்' - ஒரு வார்த்தை சொன்ன அண்ணாமலை! 30 சதவிகிதம் உயர்ந்த பட்டாசு விற்பனை, பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசியில் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனையானதால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-10-26 14:37 GMT

சிவகாசியில் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனையானதால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுப்பகுதியில் 170 பட்டாசு ஆடைகள் செயல்பட்டு வருகின்றன இந்த தொழிலில் 3 லட்சம் பேர் நேரடியாகவும் 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 70% அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டன.

அதேபோல் 70% தொழிலாளருக்கு மட்டுமே வேலை கிடைத்தது, இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவால் முடிவுக்கு வந்தால் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது தீபாவளியை முன்னிட்டு 6000 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையாகி உள்ளன. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. அங்கு அனுப்பப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகிவிட்டன. தமிழகத்தில் மற்றும் 150 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை ஆகி உள்ளன.

இந்த ஆண்டு நடைபெற்ற பட்டாசு விற்பனை தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் உற்பத்தியாளர் சங்கத் தலைவன் கணேசன் கூறியதாவது, 'சுற்றும் கோர்ட்டு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளால் சிவகாசி பட்டாசு உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகளுக்கு பொது மக்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தால் அதிகளவு பட்டாசுகள் விற்பனையாகி 6000 கோடி ரூபாய் அளவுகள் பட்டாசு வர்த்தகம் நடந்துள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது 30 சதவீதம் அதிகமாகும்' என்றார்.

ஏற்கனவே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 'ஒருநாள் பட்டாசு வெடித்தால் ஒன்றும் ஆகிவிடாது 8 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர். அவர்களின் வாழ்வு பாதிக்கப்படாமல் இருக்க ஒரு நாள் பட்டாசு வாங்கி வெடித்து காப்பாற்றுங்கள்' என கோரிக்கை விடுத்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது.



Source - Maalai Malar

Similar News