இலங்கையின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அங்கே இந்துக்களும், பெளத்தர்களும் நூற்றாண்டுகாலமாக ஒற்றுமையுடனேயே வசித்து வந்துள்ளனர். முதன்முதலில் இந்துக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை வந்தது போர்ச்சுகீசிய கிருஸ்தவர்களால்தான். 16ம் நூற்றாண்டில் இலங்கை வந்த போர்ச்சுகீசிய கிருஸ்தவர்கள், இலங்கையில் உள்ள இந்துக்களை மதம் மாறும்படி வற்புறுத்தியுள்ளனர். மதம் மாற மறுத்தவர்களை, கோவாவில் நடந்ததைப்போல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். இந்துக்களின் கோயில்களை தகர்த்தெரிந்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை இடித்த போர்ச்சுகீசியர்கள், இலங்கையிலும், பாடல் பெற்ற தலமாக விளங்கிய திருக்கேதீச்சரம் சிவன் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கினர். இப்படி எண்ணற்ற கொடுமைகளை கிருஸ்தவர்களின் கையினால் இலங்கையில் இருந்த தமிழ் இந்துக்கள் அனுபவிக்க நேர்ந்தது.
அதன்பிறகு காலனியாதிக்க சமயத்திலே இந்துக்களை மதமாற்றுவதற்காக தமிழன் வேறு இந்து வேறு என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இலங்கையில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.
இலங்கையில் தமிழ் இந்துக்களுக்கும் – சிங்கள பெளத்தர்களுக்கும் இடையே இனப்போர் ஏற்படக் காரணமே கிருஸ்தவர்கள்தான். இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது எப்படி? அதில் கிருஸ்தவ மிஷனரிகளின் பங்கு என்ன? என்பதை விரிவாகத் தெரிந்துக்கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளுக் செய்யவும்.
Mission Kali
இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்துவிட்டாலும், இந்துக்களின் அரசியல் பலம் வெகுவாக குறைந்துவிட்டது. இதற்காகத்தான் கிருஸ்தவ மிஷனரிகள் காத்திருந்தனர்.
இலங்கையின் தற்போதைய ஜனத்தொகை 2 கோடி. அதில் சுமார் 70 % பெளத்தர்கள். 13% பேர் இந்துக்கள். பெளத்தர்கள் அனைவரும் சிங்களர்கள். அதேப்போல இந்துக்கள் அனைவரும் தமிழர்கள். 10 % , முஸ்லிம்கள் இருக்கின்றனர். 7% கிருஸ்தவர்கள் இருக்கின்றனர்.
இலங்கையின் 6 மாகாணங்களில் இந்துக்களே பெரும்பான்மையான மக்கள். அவை யாழ்பானம், கிளிநொச்சி, முல்லை தீவு, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரேலியா ஆகியவை ஆகும். ஆனால் அரசியல் அதிகாரம் பெரும்பாலும் கிருஸ்தவர்கள் வசமே இருந்துவருகிறது.
உதாரணத்திற்கு வன்னி தேர்தல் மாவட்டத்தில் 75% பேர் இந்துக்கள். இதில் மொத்தம் 6 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. ஆனால் 6 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிருஸ்தவர்களாகவோ, இஸ்லாமியராகவோ அல்லது கிருஸ்தவ மதச்சார்புடையவர்களாகவோதான் உள்ளனர். இதனால் அங்கு வசித்து வரும் இந்துக்களின் உரிமைகள் கிருஸ்தவ மிஷனரிகளால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதி மடு! மடு – பரப்புக்கடந்தான் வீதியில் உள்ள ஒரு மரத்துக்கடியில் சுமார் 40 ஆண்டுகாலமாக விநாயர் சிலை இருந்து வந்துள்ளது. இதற்கு அருகிலேயே கிருஸ்தவ மத தேவாலயம் ஒரு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பகுதி காட்டுப்பகுதி என்பதால், அந்த வழியாக செல்பவர்கள் விநாயகரை வழிபட்டுச் செல்வது வழக்கம். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதி வழியாக பயணிக்கும் மக்களுக்கு வழித் துணையாக விநாயகர் இருந்து வந்ததால், அவருக்கு அதே பகுதியில் சிறு விநாயகர் கோயில் கட்டி வழிபட அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன் முதல்கட்டமாக மூலஸ்தானம் அமைத்து, அதில் பிள்ளையாரை தற்காலிகமாக வைத்து மக்கள் வழிப்பட்டுள்ளனர். இந்நிலையில்தான் விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கியுள்ளது. விழா ஏற்பாடுகளைச் செய்வதற்காக மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, கோயிலில் இருந்த விநாயகர் சிலை களவாடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ந்தனர். அதைவிடக் கொடுமை… உள்ளூர் மக்கள் கஷ்டப்பட்டு விநாயகருக்காக கட்டிய கோயிலில், கிருஸ்தவ மிஷனரிகள் அந்தோனியின் சிலையை வைத்து அராஜகம் செய்துள்ளனர்.
முழு தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளுக் செய்யவும்.
Mission Kaali
அடுத்ததாக விவசாயம் இந்துக்கள் வசம் இருந்தால், இந்துக்களை அடக்க முடியாது. அது சர்ச் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால்தான் தமிழ் இந்துக்களை அடக்கி அவர்களை ஒட்டுமொத்தமாக மதமாற்ற முடியும் என்பது சர்சின் கணிப்பு. அதற்கான வேலைகளை தற்போது சர்ச் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. மன்னாரில் 'மடு' என்ற பிரதேசத்திற்குட்பட்ட பெரிய பாண்டிவிரிச்சான் பகுதியில் விளைச்சல் நிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் பல ஆண்டுகாலமாக தமிழ் இந்துக்கள் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாய நிலங்கள் அனைத்துமே சர்சுக்கு சொந்தமானது என்று திடீரென்று உரிமை கொண்டாடத்தொடங்கியுள்ளனர் கிருஸ்தவ மிஷனரிகள். இதனால் நிலத்தில் கிடைக்கும் விளைச்சல்கள், அதன் லாபங்கள் அனைத்துமே சர்சுக்குத்தான் சொந்தம் என்றும் உரிமை கோரியுள்ளனர் கிருஸ்தவ மிஷனரிகள். கிருஸ்தவ மிஷனரிகளின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து அந்த பகுதியைச் சேர்ந்த இந்து விவசாயிகள் பல்வேறு போராடங்களை நடத்தி வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்துக்கள் தொடர்ந்து அந்தப் பகுதியில் விவசாயம் செய்வதற்கு வடக்கு மாகாண ஆளுனர், மற்றும் அந்தப் பகுதியின் ஆணையாளர் அனுமதியளித்துள்ளனர். மேலும் தமிழர்கள் அந்தப் பகுதியில் எந்த பிரச்சனையும் இன்றி விவசாயம் செய்வதற்கு தாங்கள் பக்கபலமாக இருப்போம் என்று பெளத்த குருமார்களும் ஆதரவு கொடுத்துள்ளனர். ஆனாலும் கிருஸ்தவ மிஷனரிகள் விடுவதாக இல்லை. தொடர்ந்து இந்து விவசாயிகளுக்கு தொல்லைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.
கிருஸ்தவ மிஷனரிகள் இந்துக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பது பற்றி முழு தகவலுக்கு கிழே உள்ள லிங்கை கிளுக் செய்யவும்.
Mission Kaali
அது மட்டுமல்ல…திருக்கேதீச்சரத்தில் உலகப்புகழ்ப் பெற்ற சிவாலயம் உள்ளது. இந்த சிவன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மிஷனரிகளால் சிறு கட்டிடம் கட்டப்பட்டது. இதை எதிர்த்து இந்துக்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக அந்தக் கட்டடத்தை இடிக்க மிஷனரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதன்பிறகு அந்த கட்டிடம் இன்றுவரை இடிக்கப்படவில்லை. மாறாக அதே இடத்தில் இன்று மிகப் பெரிய சர்ச் கிருஸ்தவ மிஷனரிகளால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உதாரணங்களை அடுக்கிகொண்டே செல்லலாம். இந்நிலையில்தான் கிருஸ்தவ மிஷனரிகள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு சிவசேனை என்ற இந்து அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் கிருஸ்தவ பிஷப்புக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து இலங்கை இந்துக்கள் மீதான கிருஸ்தவ மிஷனரிகளின் தாக்குதலைக் கண்டித்தும், இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த செப்டெம்பர் 27ம் தேதி இலங்கை இந்துக்கள் சார்பில் மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதுப்பற்றிய முழு தகவலுக்கு… மிஷன் காலி
இப்படி இலங்கையில் உள்ள இந்துக்களுக்கு தொடர்ந்து கிருஸ்தவ மிஷனரிகளால் பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில், தமிழ் தேசியம் பேசும் ஒருவர் கூட அதைக் கண்டிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
விஷயம் என்னவென்றால்… இலங்கையில் உள்ள இந்துக்களை மதமாற்ற வேண்டும். அதை அடிப்படையாக வைத்து இந்தியாவில் தமிழக இந்துக்களை மதமாற்ற வேண்டும். அதற்கு இலங்கையில் இனவாத சண்டையை தூண்ட வேண்டும். இனவாதச் சண்டையை தொடங்க, தமிழன் வேறு இந்து வேறு என்று பிரச்சாரம் செய்யவேண்டும். அந்தப் பிரச்சாரத்திற்கு பெயரே தமிழ் தேசியம்.
கிருஸ்தவ மிஷனரிகளின் திட்டம் இதை தெளிவாக செய்து வருகின்றனர். இனியும் தமிழ் இந்துக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால், நாமும், நமது பண்பாடும் அழிந்துப் போவது நிச்சயம்.