FCRA சட்டத்தில் செய்யப்பட்ட முக்கிய திருத்தம்: NGOs வெளிநாட்டு நிதிகளை பெறுவதற்கு அடிப்படை உரிமை இல்லை ! - மத்திய அரசு திட்டவிட்டம் !
FCRA சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் படி, NGOS வெளிநாட்டு பங்களிப்பு பெறுவதற்கான அடிப்படை உரிமை கிடையாது.
இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில்(FCRA) தற்பொழுது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு NGOS நிறுவனங்களும், இந்த FCRA சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படுகின்றன. ஏனெனில் பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் பங்களிப்பின் மூலமாக தங்களுடைய தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றது. மேலும் பல்வேறு நபர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சமூக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகக் கூறி அவற்றை இலாபம் பார்ப்பதற்காக உபயோகப்படுத்துகிறார்கள். இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தில் பல்வேறு குளறுபடிகளும் ஏற்படுகின்றன. மேலும் வருமான வரியும் கட்டுவதற்கு விலக்குகளும் அவர்கள் பெறுகிறார்கள்.
இதன் காரணமாக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கில் முடிவு தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த வழக்கிற்கு இந்திய அரசு வெள்ளிக்கிழமை தன்னுடைய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. குறிப்பாக இந்த வழக்கின் முடிவில், NGOS இனி வெளிநாட்டு நிதிகளை பெறுவதற்கு அடிப்படை உரிமைகள் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. FCRA (2010) சட்டத்தில் செய்யப்பட்ட பல்வேறு திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட ரிட் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. திருத்தங்கள் முறையாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 28 செப்டம்பர் 2020 அன்று அறிவிக்கப்பட்டதும், தற்பொழுது குறிப்பிடத்தக்கது. எனவே இறுதியாக தற்பொழுது செய்யப்பட்ட சில முக்கியமான திருத்தங்களை ஒவ்வொரு NGOS நிறுவனமும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட FCRA சட்டம் திருத்தப்பட்ட 7வது பிரிவின்படி, இந்த சட்டத்தில் பதிவு செய்து சான்றிதழ் வாங்கிய அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெற்ற எந்த நபரும் ஏதேனும் வெளிநாட்டு பங்களிப்பைப் பெற்றால், அத்தகைய வெளிநாட்டு பங்களிப்பை வேறு எந்த நபருக்கும் மாற்ற வேண்டும். மேலும் FCRA NGOSகளின் அனைத்து அலுவலகப் பணியாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு கட்டாய ஆதார் அடையாளச் சான்றுகளை வைத்திருக்க வேண்டும். மேலும் முக்கியமானது, ஒரு NGOS அனைத்து வெளிநாட்டு பங்களிப்புகளையும் பெறுவதற்கு பாரத ஸ்டேட் வங்கியில்(SBI) புது தில்லியின் முதன்மைக் கிளையில் கணக்கு தொடங்குவது கட்டாயமாகப் பட்டு உள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்(NGOS) இந்தியாவில் எந்தப் ஒரு வங்கியிலும் கூடுதலாக வேறு கணக்குகளையும் திறந்து கொள்ளலாம் அந்த கணக்கில் இருந்து, இந்த SBI கணக்கிற்கும் நிதியை மாற்றிக் கொள்ளலாம்.