ஏ.பி.வி.பி முதல் மத்திய தேர்தல் குழு வரை உயர்ந்த தமிழகத்தின் முதல் பெண் அரசியல் தலைவர் - வானதி சீனிவாசன்
தமிழக பா.ஜ.க எம்.எல்.ஏவான வானதி சீனிவாசன், கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பில் ஒன்றான கட்சியின் மத்திய தேர்தல் குழுவில் (CEC) நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க எம்.எல்.ஏவான வானதி சீனிவாசன், கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பில் ஒன்றான கட்சியின் மத்திய தேர்தல் குழுவில் (CEC) நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் CEC க்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழ் பெண் வானதி ஆவார்.
இது தவிர, வானதி சீனிவாசன் 2020 அக்டோபரில் உயர்த்தப்பட்ட பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் (மகளிர் பிரிவு) தேசியத் தலைவராகவும் உள்ளார்.
திரு. கந்தசுவாமி மற்றும் திருமதி பூவத்தாள் ஆகியோருக்குப் பிறந்த வானதி சீனிவாசன், தமிழ்நாடு, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொழிலில் வழக்கறிஞரான வானதி சீனிவாசனின் அரசியல் பிரவேசம் பா.ஜ.க'வின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யா பரிஷத் (ABVP) மூலம் தொடங்கியது. அவரது ஏ.பி.வி.பி நாட்களில் இருந்தே, அவர் மதுவிலக்கு, பயங்கரவாதத்தின் மீதான அரசாங்கத்தின் அக்கறையின்மை மற்றும் பலவற்றிற்காக பல போராட்டங்களை நடத்தினார்.
2009 முதல் 2014 வரை பா.ஜ.க'வின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும், 2014 முதல் 2020 வரை பொதுச் செயலாளராகவும் இருந்தார். ஜூலை 2020 இல் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2011 & 2016 தமிழ்நாடு மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் 33,113 வாக்குகள் பெற்றார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ'வாக வெற்றி பெற்றார்.
அடிமட்ட ஏ.பி.வி.பி ஊழியராக இருந்து இப்போது பல பதவிகளை வகிக்கும் வானதியின் அரசியல் வாழ்க்கையின் உயர்வு பலரை வியக்க வைத்துள்ளது.