இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து குவியும் நிதி - இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களை அணிதிரட்டும் பகீர் திட்டம்!
Foreign funding, radical Islamic organisations and hijab protests: A plan to mobilise Muslim youth against India
ஹிஜாப் போராட்டங்களைத் திட்டமிடுவதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற தீவிர இஸ்லாமிய அமைப்புகளின் ஈடுபாட்டிற்கான தெளிவான ஆதாரங்களை பல அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. PFI மற்றும் Jamaat-e-Islam ஆகிய இரண்டும் சமீபத்திய வாரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன
கர்நாடகாவில் உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மாணவர்களைத் தூண்டிவிட்டு மேலும் குழப்பத்தை உருவாக்குவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இளம் முஸ்லிம்களை தங்கள் அமைப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், பிரபல தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவர் பிரிவு மற்றும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத பயங்கரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் ஆகியவை கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை ஏற்பாடு செய்ய முஸ்லீம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியது.
குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் முஸ்லிம் இளைஞர்களை தீவிரமயமாக்க முயற்சிக்கிறது. கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தின் போது பிரபலமடைந்த பர்தா அணிந்த மாணவியான முஸ்கன் ஜைனப், தந்தை தீவிர இஸ்லாமிய அமைப்பான PFI உடன் தொடர்பு கொண்டிருப்பவர் என்பதை கவனிக்க வேண்டும். அவர் மட்டுமல்ல, போராட்டத்தில் தொடர்புடைய இருவர் தீவிர இஸ்லாமிய அமைப்போடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.
இக்கல்லூரியில் கல்வி கற்கும் 150 முஸ்லிம்களில் 6 முஸ்லிம் மாணவர்களுக்கே ஹிஜாப் பிரச்சினை இருப்பதாக கல்லூரி அபிவிருத்திக் குழுவின் துணைத் தலைவர் யஷ்பால் சுவர்ணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்செயலாக, எதிர்ப்பு தெரிவித்த ஆறு சிறுமிகளும் சில அமைப்பினரால் தூண்டப்பட்டு அவ்வாறு செய்துள்ளனர்.
பல ஆண்டுகளாக, கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வருகிறார்கள், ஆனால் கல்லூரி ஆடைக் குறியீட்டின்படி வகுப்பறைகளுக்குள் அதை அகற்ற வேண்டும். இந்த பெண்களும் இந்த விதிகளை பின்பற்றி வந்தனர். ஆனால், டிசம்பரில் இருந்து, வகுப்புகளின் போதும் ஹிஜாப் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரத் தொடங்கினர். இது அவர்களாக கேட்ட மாதிரி தெரியவில்லை என்கிறார் கல்லூரி முதல்வர்.