G20 உச்சி மாநாட்டிற்கு அஸ்திவாரம் போட்ட மோடி அரசு.. உலக நாடுகளை வாய் பிளக்க வைத்த செயல்..

Update: 2023-07-27 01:55 GMT

சர்வதேச அளவில் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கியது தான் G20 மாநாடு. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி20அமைப்பின் 2022-23-ம் ஆண்டுக்கான தலைமைபொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. உலக அளவில் நடக்கும் அதிகமான வர்த்தகத்தில் 85 சதவீதத்திற்கும் இந்த 20 நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த G-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருக்கிறது.

அதனுடைய மூன்று நாள் கூட்டம் காஷ்மீரில் நடந்ததை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மைதான் மிகவும் அமைதியான வழியில் தற்பொழுது அந்த கூட்டமானது நடைபெற்றது. அதற்கு முற்றிலும் காரணம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.


G20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் உள்ள காரணத்தினால் தனது முதல் கூட்டமானது காஷ்மீரில் நடத்த மோடி அரசு முடிவு செய்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் குறிப்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த காஷ்மீர் வேறு, தற்போது இருக்கும் காஷ்மீர் வேறு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போது காஷ்மீர் பயங்கரவாதத்தின் குடிலாகவே இருந்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத மோடி அரசாங்கம் வெற்றிகரமாக தன்னுடைய முதல் கூட்டத்தை காஷ்மீரில் தொடங்கியது.


அப்போது தொடங்கியது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வெற்றி பயணம். இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக,பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதிக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

G20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியது. G20 மாநாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது. 28-ம் தேதி ஜி20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் 35 பேர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க காலநிலை தூதர் ஜான் கெர்ரி, சென்னையில் நடைபெறும் ஜி20 காலநிலை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.


இந்த நிலையில் டெல்லியில் செப்டம்பர் மாதம் நடக்கும் G-20 உச்சி மாநாட்டுக்காக மறுவடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு வளாகத்தை பிரதமர் நரேந்திரே மோடி வருகிற 26-ந் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை டெல்லியில் G20 தலைவர்களுக்கான மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ITPO வளாகத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் வளாகத்தை திறப்பதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஹவானை செய்து பூஜை விழாவில் பங்கேற்றார். பின்னர் சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும் இந்த வளாகம் உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளை மிகப் பெரிய அளவில் நடத்தும் இந்தியாவின் திறனுக்கு ஒரு சான்றாகும். இந்த மாநாட்டு மையத்தில் 7,000 நபர்கள் அமரக்கூடிய பெரிய இருக்கை வசதி உள்ளது. இது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஓபரா ஹவுசில் சுமார் 5,500 பேர் அமரும் திறனை விட பெரியதாக உள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News