சமீபத்திய 2020 ஜனநாயக குறியீட்டில் இந்தியா 53 ஆவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது கடைசியாக வந்த அறிக்கையிலிருந்து இரண்டு இடங்கள் பின்னடைவாகும். இந்த பின்னடைவிற்கு சிவில் உரிமைகள் மீதான இந்தியாவின் ஒடுக்குமுறைகளை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகள் இதற்காக பயன்படுத்தும் காரணங்களோ, இந்த முடிவுக்கு வருவதற்கு பயன்படுத்தப்படும் முறைகளின் உண்மை தன்மையை இந்த கட்டுரை பகுப்பாய்வு செய்ய விரும்பவில்லை. அதற்கு பதிலாக இந்த அமைப்புகளின் மதிப்பீட்டிற்கு ஏற்ப உலகின் 10 சிறந்த ஜனநாயக நாடுகள் என தேர்வு செய்யப்பட்ட நாடுகளின் முடிவுகளுக்கு என்ன காரணம் என ஆராய முயற்சிக்கிறது.
உதாரணமாக நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, கனடா, பின்லாந்து, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 2020 ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 ஜனநாயக நாடுகள் ஆகும்.
மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் கனடா பெரிய நாடாகும். இந்த பத்து நாடுகளின் சராசரி மக்கள் தொகை 13.7 மில்லியன். உலக மக்கள் தொகையில் அவர்களது சதவிகிதம் 1.5 %. இந்தியாவின் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த 10 நாடுகளையும் ஒன்றாக இணைத்தால் இந்தியாவின் மக்கள் தொகையில் வெறும் 8.5 சதவிகிதம் பேர் உள்ளனர். எனவே ஜனநாயக நாடுகளில் அதிகமான மக்கள் இல்லை.
இரண்டாவது, இந்த பத்து நாடுகளின் பரப்பளவை கணக்கில் கொண்டால், பெரிய நாடுகளான கனடா மற்றும் ஆஸ்திரேலியா முறையே 9.98 மில்லியன் சதுர கிலோ மீட்டர் மற்றும் 7.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளன. இதை தவிர்த்து மற்ற நாடுகளில் மொத்த பரப்பளவு 10.34 மில்லியன் சதுர கிலோமீட்டர். இது பூமியின் மேற்பரப்பில் 3.79 சதவிகிதமாகும். அதாவது சராசரியாக ஒரு நபருக்கு 1,10,634 சதுர மீட்டர் கிடைக்கிறது. அதாவது ஐஸ்லாந்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1.2 நபர்கள் அடர்த்தி. ஆஸ்திரேலியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 3.3 நபர். கனடாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 3.7 நபர்கள். 10 நாடுகளின் சராசரி அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 6.75 நபர்கள். சொல்லப்போனால் உலக மக்கள் தொகையில் 1.5 சதவீதத்தை கொண்டுள்ளன.
இந்த பத்து நாடுகள் பூமியின் மேற்பரப்பில் 2.5 மடங்கு நிலங்களை வைத்திருக்கின்றன. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்கள் பரப்பளவில் சுமார் ஆறு மடங்கு, மற்றும் ஒரு நபருக்கு 5 மடங்கு அதிக இடத்தை வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், பூமியின் பெரும்பகுதியைக் கொண்டு மக்கள் தொகையில் சிறிய பங்கை கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததாக இருக்கிறது.
இந்த 10 நாடுகளும் மிக அதிகமான மொத்த தேசிய வருமானத்தை கொண்டுள்ளன. இது நியூசிலாந்தில் 40,599 அமெரிக்க டாலர். அயர்லாந்தில் 68, 371 அமெரிக்க டாலர் என உள்ளது. மேலும் 10 நாடுகளின் தனிநபர் சராசரி 58, 271 அமெரிக்க டாலர். அதாவது ஒரு பணக்கார நாடாக இருப்பது ஜனநாயகத்திற்கு உதவுகிறது.
வாழும் ஆயுட்காலம் டென்மார்க்கில் 9.1 95 ஆண்டுகள். ஆஸ்திரேலியாவில் 83.4 ஆண்டுகள். சராசரியாக 82.4 ஆண்டுகளாக 10 நாடுகளும் கொண்டுள்ளன. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இந்த நாடுகளின் சராசரி ஆயுட்காலம் 12.7 ஆண்டுகள் அதிகமாகும்.
கல்வியின் அடிப்படையில் பார்த்தால் ஆஸ்திரேலியாவின் அனைத்து நாடுகளும் கல்வி அறிவுத் துறையில் செய்யவேண்டியது மிக குறைவு. அவர்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 99.2சதவிகிதம் ஆகும். இது பிற உலக நாடுகளில் இருந்து கொஞ்சம் புலம்பெயர்ந்த மக்களை தங்கள் பொருளாதாரத்திற்காக அழைத்து கொள்வதால் 100%க்கு சற்று குறைவாக உள்ளது.
இனத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே ஒரு குழு தான் ஆதிக்கம் செலுத்துகிறது. பின்லாந்து நாட்டில் 93. சதவிகிதம் பினிஷ் வம்சாவளியினர். மேலும் பொதுவான இனப் பின்னணியை கொண்ட விகிதத்தில் 10 நாடுகளின் சராசரி விகிதம் 82.5. இந்த நாடுகளில் சுமார் 64 சதவீத மக்கள் ஒரே மதத்தை பின்பற்றுபவர்கள். சராசரியாக 28.2 சதவிகித மக்கள் எந்த ஒரு மதத்திலும் இல்லை.
சிறிய மக்கள் தொகை, பெரிய புவியியல் பகுதி, மற்றும் அதிக செழுமை கொண்ட நாடுகள் ஜனநாயகத்தின் சிறிய விவரங்களை கூட கடைப்பிடிப்பதில் முன்னணியில் உள்ளன. மிகப்பெரிய மற்றும் சிக்கலான மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு இதே போன்ற வசதிகள் இல்லை. இட வசதி குறைவு, பொருளாதார செல்வம் குறைவு, சுகாதாரம், கல்வி, ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இன்னும் அவை போராட வேண்டி இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இத்தகைய "ஜனநாயக மதிப்பீடு" முடிவுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு கொண்டுதான் இருக்கும்.
Reference: ORF