ஒரு நல்ல தலைவரால் என்ன செய்ய முடியுமென சாதித்து காட்டிய அற்புத தலைவர் மோடி!

Update: 2022-09-14 02:30 GMT

விளையாட்டு, தொழில் , நிறுவனம் என எந்த களமாக இருந்தாலும் ஒட்டு மொத்த அணியும் நல்ல தலைமையின் கீழ் தான் சுழலும் என்பது எழுதப்படாத விதி. ஒரு குழு எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் ஒரு தலைவர் சரியானவராக இல்லையெனில் அந்த குழுவின் மொத்த உழைப்பும் வீண் தான். அதுவே முரணாக எத்தனை மோசமான குழுவையும் ஒரு நல்ல தலைவரால் நல்ல விதமாக வழி நடத்த முடியும்.

அது போல இன்று எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தாலும், இந்த மாபெரும் ஜனநாயக நாட்டிற்கென நல்ல தலைவர்கள் வெகு அரிதாகவே உதயமாகின்றனர். அந்த வகையில் இந்த நாடு கண்ட ஆளுமை மிகு தலைவர்களுள் நரேந்திர மோடி நிகரற்றவர்.

சேவை, நல்ல ஆட்சி மற்றும் ஏழை எளிய மக்களின் நலனை மேம்படுத்துதல் இந்த மூன்றையே தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் அரிய பண்பாளர். இதற்கு தகுந்த நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த ஜன் தன் யோஜ்னா திட்டம்.

நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பு மத்திய அரசு மக்களுக்கென ஒரு நிதியை ஒதுக்கினால். அந்த நிதி மாநிலம் கடந்து, மாவட்டம் கடந்து, பல கிளை பிரிவுகளை கடந்து, பல பஞ்சாயத்துகள், மாநகராட்சிகளை கடந்து மக்களை சென்று சேர்கிற போது தோராயமாக ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களை சென்று சேரும் . இந்த பிரச்சனைக்கு பின் இருக்கும் ஏராளமான தடைகளை ஒரே திட்டத்தின் மூலம் சீர் செய்தவர் மோடி. அவர் தவறு நடப்பதற்கான அடிப்படையை மாற்றினார். மக்களின் கைகளுக்கு பணம் சென்று சேராமல் தடுத்த அந்த தவறான முறையை அடியோடு மாற்றினார்.

ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அனைவரையும் வங்கி கணக்கை திறக்க ஊக்குவித்தார். அதன் விளைவாக இன்று அரசாங்கம் வழங்கும் நிதி, மானியம் போன்ற உதவித்தொகைகள் அனைத்தும் எந்த இடையூறுமின்றி, மக்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து சேர்கிறது. இந்த திட்டத்தின் இந்திய பொருளாதாரம் மாபெரும் அற்புதத்தை சந்தித்தது என்றே சொல்லலாம். டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகளாவிய நாடுகளில் இந்தியா முதன்மை தேசமாக திகழ்கிறது.

இது அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே.

Similar News