'எங்களை அரசு கண்டுகொள்ளவில்லை' - குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி கொடுத்து தி.மு.க அரசிற்கு ஷாக் கொடுத்த விவசாயிகள்

குடும்ப அட்டைகளை அரசிடம் திருப்ப ஒப்படைத்த விவசாயிகளால் திருப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-30 13:17 GMT

குடும்ப அட்டைகளை அரசிடம் திருப்ப ஒப்படைத்த விவசாயிகளால் திருப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சுமார் 48,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கடைமடையான இப்பதிக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் விடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் பி.ஏ.பி வாய்க்காலின் வழித்தடத்தில் நீர் திருட்டு காரணமாக பல ஆண்டுகளாக தங்களுக்குள்ளான நீர் குறைவாக வருவதாகவும் இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளகோவில், காங்கேயம் பகுதி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பி.ஏ.பி வெள்ளகோவில் கிளை வாய்க்கால் சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி கூறும் போது, 'திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த நீரை நம்பி வெள்ளகோவில் காங்கேயத்தில் சுமார் 48 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் திருமூர்த்தி அணையில் வாய்க்கால் வழியாக வரும் நீரை சில விவசாயிகள் மோட்டார் வித்து திருடி வந்தனர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தண்ணீர் திருட்டு கட்டுக்குள் வந்தது.

தற்போது வாய்க்காலில் செய்து போர் அமைத்து நூதன முறையில் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. இதனால் கடைமடை பகுதியான எங்களுக்கு தண்ணீர் வரத்து மிக குறைந்த அளவிலேயே வருகிறது இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய திருப்பூர் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஜெய்பீம், இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார் இதனால் அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


Source - Junior Vikatan

Similar News