அரசு மருத்துவமனை தவறான சிகிச்சையால் பறிபோனது கண் பார்வை - சுகாதாரத்துறையின் அவலங்கள் தொடர்கிறது

மூக்கு அறுவை சிகிச்சையின் போது கண் பார்வை பறிபோனது தொடர்பாக அரசு மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-18 12:35 GMT

மூக்கு அறுவை சிகிச்சையின் போது கண் பார்வை பறிபோனது தொடர்பாக அரசு மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூர் அரசு மருத்துவமனைக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்யச் சென்ற பெண்ணுக்கு இரு கண்களும் பறிபோனதாக புகார் எழுந்துள்ளது. கடலூர் சான்றோர் பாளையத்தை சேர்ந்தவர் உமாபதி இவர் கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு 4 முதல் 5 நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய நிலையில் அவருக்கு கண் பார்வை தெரியாததால் ஒரு மாத காலம் இவரை மருத்துவமனையில் வைத்து மருந்துகள் கொடுத்து வந்துள்ளனர் மருத்துவர்கள். அதன் பின்னர் இவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அப்போது உமாபதி கணக்கு பார்வை தெரியவில்லை ஏன் என மருத்துவரிடம் கேட்ட பொழுது மருத்துவர்கள் கண்களில் ரத்தக்கட்டு காரணமாக அப்படி உள்ளதாகவும் காலப்போக்கில் கண்கள் சரியாகிவிடும் என கூறி அனுப்பியுள்ளனர்.

இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் இதுவரை கண்கள் இரண்டும் தெரியவில்லை என்பதால் கண் பார்வை பாதிக்கப்பட்ட அவரது உறவினர்களுடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சிய ர் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார்.

கடலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தவறான சிகிச்சையை மக்களுக்கு அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டை உறவினர்கள் வைத்தனர். கடந்த மாதத்தில் ஒரு சிறுவன் கையில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மேலும் ஒரு பெண்ணுக்கு வயிற்றுடன் சேர்த்து குடலை வைத்து தைத்த சம்பவம் நடைபெற்றதாகவும் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே புகார் அளித்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் குறுகையில் மூக்கில் உள்ள சதையை அகற்றுவதற்காக ஆபரேஷன் செய்து முடித்த பிறகு தன்னுடைய இரண்டு கண்களும் பார்வை பறிபோனதாக சரியான மருத்துவமனை சென்று விசாரித்த பொழுது கண்ணுக்குச் செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அங்குள்ள மருத்துவர்கள் இதற்கான மீண்டும் ஆபரேஷன் செய்தால் ஒரு கண்ணில் மட்டுமே பார்வை வரும் எனக் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.


Source - Polimer News

Similar News