#IndiaTogether இந்தியாவை பணிய வைக்க நினைக்கும் அந்நிய சக்திகள் - காட்டிக் கொடுத்த சிறுமி கிரேட்டா.!

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையை தடை செய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்பு திட்டமிட்டதா.?

Update: 2021-02-04 13:24 GMT

தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் பல திடுக்கிடத்தக்க திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னர் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி செல்ல அனுமதி கேட்ட போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்குச் சென்று அங்கு ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடிக்கு இணையாக காலிஸ்தான் கொடியை ஏற்றி, டெல்லி காவல் துறையினர் மீது வன்முறையில் ஈடுபட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அப்போதே விவசாயிகள் போராட்டம் திசை மாறி விட்டதாகவும் காலிஸ்தான் இயக்கத்தினரால் பின்னிருந்து இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறையை ஆதரித்து Sikhs For Justice (SFJ) என்ற காலிஸ்தானி அமைப்பு வீடியோ வெளியிட்டது. காலிஸ்தான் கொடியை ஏற்றியவர்களுக்கு பரிசளிப்பதாகவும் அறிவித்தது. SFJ இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

டெல்லி வன்முறை குறித்து உண்மைகள் வெளிவந்து கொண்டிருந்த அதே வேளையில், திடீரென பாப் பாடகி ரைஹானா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் மகள் மீனா ஹாரிஸ், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக அடையாளப்படுத்திக் கொள்ளும் சிறுமி கிரேட்டா தன்பர்க் மற்றும் ஒரு அமெரிக்க செனட் உறுப்பினர் என வெளிநாட்டினர் பலர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய அரசு மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை வெளிநாட்டினர் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இந்திய உள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று அறிக்கை வெளியிட்டது. தற்போது தடை செய்யப்பட்ட SFJ அமைப்பு விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் ட்வீட் செய்ததன் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

நேற்று மாலை சமூக ஆர்வலர் சிறுமி கிரேட்டா தன்பர்க் தனது ட்விட்டர் கணக்கில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் பயன்படுத்த என்று ஒரு ஆவணத்தை பதிவிட்டார். சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கி விட்டார். ஆனால் அந்த பதிவில் பகிரப்பட்ட ஆவணத்தை பலரும் பதிவிறக்கம் செய்து அதில் என்ன இருக்கிறது என்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே எப்படி விவசாயிகள் போராட்டத்தை பிரபலப்படுத்துவது, பிரச்சாரம் செய்வது, சமூக ஊடகங்களில் என்னென்ன பதிவிட வேண்டும், யார் பதிவிட வேண்டும், அதற்கான ட்வீட்டுகள், யாருடைய ட்விட்டர் கணக்குகளை இணைப்பது என்று விரிவாக பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை மாறாமல் அப்படியே பாடகி ரைஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இத்தகைய பிரபலங்கள் பணத்துக்காக இவ்வாறு தங்களது சமூக ஊடக பக்கங்களை பயன்படுத்துவது வழக்கம் என்பதால் இவர்களுக்கு யார் பணம் கொடுப்பது என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது கிரேட்டா வெளியிட்ட ஆவணத்தின் மூலம் இதற்கு பதில் கிடைத்திருக்கிறது. இதில் AskIndiaWhy.com என்ற இணையதள முகவரி வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இணையதளம் கனடாவில் அமைந்துள்ள Poetic Justice Foundation என்ற அமைப்புக்கு சொந்தமானது. இந்த அமைப்பின் இணையதள முகவரியோ ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. PJF மற்றும் தடை செய்யப்பட்ட SFJ இடையிலான தொடர்புகள் அனைத்தும் ஏற்கனவே வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு‌ விட்டன. SFJ பாகிஸ்தான் உளவு நிறுவனமான ISI உடன் இணைந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News