புலம்பெயர் தொழிலாளர்கள் நெருக்கடியை திறம் பட கையாண்ட யோகி அரசு - ஹார்வேர்ட் ஆய்வு பாராட்டு!

Update: 2021-04-09 01:53 GMT

பிரபல ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று, உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம், கொரானா வைரஸ் பரவல் காரணமாக நடைபெற்ற புலம்பெயர்ந்தோர் தொழிலாளர் பிரச்சினையை மிகுந்த பக்குவத்துடன் கையாண்டதாகத் தெரிவித்துள்ளது.

இதன் அதிகாரபூர்வமான செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஹார்வார்டு யூனிவர்சிட்டியால் செய்யப்பட்ட ஆய்வு, புலம்பெயர் தொழிலாளர்களின் நெருக்கடியை எடுத்துக்காட்டி, எப்படி உத்திரபிரதேச அரசாங்கம் இதை திறமையாக கையாண்டது என சுட்டிக்காட்டுகின்றது.

செய்தி தொடர்பாளர் கூறுகையில், யோகியின் அரசாங்கம் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல், ரேஷன் பொருட்களை அளித்தல், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சுகாதார நிலையங்களை நடத்துதல் போன்ற பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் உயிர் வாழ தினசரி கூலியை நம்பியிருந்தனர். இதனால் மாநில அரசாங்கம், அவர்களுக்கு இலவச ரேஷன் அளிக்கும் திட்டங்களை அறிவித்தது.

ஹார்வேர்டு ஆய்வில் யோகி அரசாங்கத்தின் 'மாதிரி', எப்படி புலம்பெயர் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை பாதுகாத்தது, கொரானா ஏற்படாமல் அவர்கள் குடும்பங்களை பாதுகாத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களுடைய திறன்களை வளர்த்து பிற விஷயங்களை எப்படி சமாளித்தது என்று விரிவான ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றிய மாநில அரசாங்கம், ஒரு முழுமையான அணுகுமுறையை கையாண்டதாக தெரிவிக்கிறார்கள். பாதியில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்வே வசதிகளை செய்து கொடுத்ததுடன், மாநில அளவில் உள்ளே பயணம் செய்ய போக்குவரத்து வசதிகளை உருவாக்கியதாகவும் கூறுகிறது.

இந்திய ரயில்வே துறையுடன் ஒத்துழைத்த மாநில அரசாங்கம், ஷ்ரமிக் ரயில் வண்டிகள் மூலம் 1604 ரயில்களில் 21 லட்சம் பேர் தொழிலாளர்களை கொண்டு வந்து சேர்த்தது. இது புலம்பெயர் மொத்த தொழிலாளர்களில் 80 சதவிகிதம் ஆகும்.

24 மணி நேரத்திற்குள் டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை வீடு கொண்டு வந்து சேர்த்தது. அங்கே எல்லைகள் மார்ச் 28,, 2020 இல் மூடப்பட்டன. மாநிலத்துக்கு உள்ளேயே பயணம் செய்ய விரும்புவோருக்கு 24 மணி நேரமும் பேருந்துகள் ஒதுக்கப்பட்டன.. கொரானா பரவலை தடுப்பதற்கு மூன்று படி அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டது. இது, வெப்ப பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் தனியாக வைத்திருத்தல்.

மாநில சுகாதாரத்துறை 90 ஆயிரத்திற்கும் மேலான பரிசோதனை குழுக்களை உருவாக்கி புலம்பெயர் தொழிலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்தனர.

மேலும் மாநில அரசாங்கம், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய வழிகாட்டுதல்களின் படி 18 ,140 தனிமைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. 15.15 லட்ச புலம்பெயர் தொழிலாளர்கள் வெவ்வேறு நேரங்களில் தனிமைப்படுத்தப் பட்டனர். அறிகுறி உள்ளோருக்கு பரிசோதனையும் செய்யப்பட்டது.

இந்த ஆய்வு மேலும், மாநில அரசாங்கம் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்துக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு நெடுநாளைய திட்டங்கள் தீட்டி அத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டதை பாராட்டியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு அவர்களுடைய திறன்களை பட்டியலிடவும் மாநில அரசு தொடங்கியது

Tags:    

Similar News