திரைப்படங்கள், வலைதள தொடர்கள், விளம்பரங்களில் உள்நோக்கத்துடன் இந்து மத வெறுப்பு- ஓர் தொகுப்பு ! #HinduHatredOnScreen

Update: 2021-11-20 06:49 GMT

உலகத்தின் மிகப்பழமையான ஒரு நாகரீகத்தை அழிப்பதற்கான அமைதியான வழி எது என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? அதுவும் இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய காலனித்துவவாதிகளால் பல நூற்றாண்டுகளாக தாக்கப்பட்ட ஒரு நாகரீகத்தை? அவர்களில் ஒவ்வொருவரும் இந்தியாவுடைய பழமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை தாக்கி தங்களுடைய சொந்த கலாச்சாரத்தை திணிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

பல பழமையான நாகரீகங்களில் அதனுடைய தூய தன்மையை இழக்காமல் இந்தியா மட்டுமே இன்று தனித்து நிற்கிறது. இந்தியாவுடைய வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சாவி நம்முடைய பழமையான வேதங்கள், புராணங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் உள்ளது. அங்கு பலவிதமான கட்டிடக் கலை, ஆயுதங்கள், தற்காப்பு உபகரணங்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காணலாம்.

இது இந்திய நாகரீகம் எந்த அளவு முன்னேற்றம் அடைந்திருந்தது என்பதையும் அறிவியல், தொழில்துறை, மருத்துவம், கட்டிடக்கலை கலை என பழங்காலத்தில் செய்யப்பட்ட ஒவ்வொரு வேலைப்பாட்டிலும் அதன் சிறப்பு தன்மை பிரதிபலித்தது என்றே கூறலாம். பூஜியத்தை கண்டுபிடித்த ஆரியபட்டா, அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படும் சுஸ்ருதா, அர்த்த சாஸ்திரத்தின் ஆசிரியர் சாணக்கியா இந்த நாட்டில்தான் பிறந்தனர். நாளந்தா, தட்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்களும் இந்த நாட்டில் தான் உருவாக்கப்பட்டது.

மேலைநாடுகளின் எந்த உதவியும் இல்லாமல் இந்தியா முன்னேற்றத்தின் உச்சியை ஒருகாலத்தில் அடைந்திருந்தது. அதன் சாவி இந்தியாவின் பழமையான வரலாற்று பக்கங்களில் புதைந்துள்ளது.

இந்தியா, மேலைநாடுகளுக்கு ஒரு தங்க வாத்து. 130 கோடி மக்கள்தொகை உள்ள இந்த நாடு அவர்கள் நாட்டில் உருவான அனைத்து தயாரிப்புகளுக்கும் ஒரு சந்தை. பிரெஞ்சு, பிரிட்டிஷ் என 200 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்த பிறகும் நம் வேர்களிலிருந்து நாம் நகர்ந்து செல்லவில்லை.

எனவே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தினர், சுயசார்பு என்று பேருக்கு கொள்கை கொண்ட ஒரு கும்பலிடம் நாட்டு நிர்வாகத்தை அளித்துச் சென்றனர். அதே சமயத்தில் இந்தியாவிற்கு உள்ளேயே ஒரு குழு, "மேற்படிப்பு, முன்னேற்றம்" என்ற பெயரில் இந்தியாவை அதன் வேர்களிலிருந்து நகர்த்த  முடிவுசெய்தது. பாரம்பரியம், கலாச்சாரம், இந்து மதத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த முயற்சித்தது. இந்து மதத்தை அழிக்க ரத்தம் சிந்தாமல் ஒரு முயற்சி.!

கேளிக்கை வாயிலாக இந்து மத வெறுப்பு பிரச்சாரம்

மக்களின் மனதை ஈர்க்க ஒரு முக்கியமான வழி கேளிக்கை. பொழுதுபோக்கு, திரைப்படங்கள், நாடகங்கள், பாட்டுகள், நடனங்கள். மக்கள் இத்தகைய விஷயங்களை மகிழ்ச்சியாகவும் தொடர்ச்சியாகவும் ரசித்து வருகிறார்கள். எனவே இந்த ஊடகங்களின் வாயிலாக செய்திகளை பரப்புவது நிறைய பேரை சென்றடைகிறது. இதன்காரணமாகவே இடது-சார்புள்ள பல கலைஞர்கள் தங்களுடைய படங்கள், நாடகங்கள், விளம்பரங்கள் மூலமாக இந்து மதத்திற்கு எதிராக நேரடியாகவோ, இலைமறை காயாகவோ கருத்துகளை தெரிவிப்பார்கள். இது குறிப்பாக இந்து இளைஞர்களை இந்து மதத்தில் இருந்து தள்ளி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் உத்தியாகும்.

வகை 1: இந்து சாதுக்கள், சாமியார்கள் மீதான பிரச்சாரம்

பல ஆண்டுகளாக திரைப்படங்கள், வலைதள தொடர்கள், நாடகங்கள், விளம்பரங்கள் இந்து சாதுக்கள், சாமியார்களை கோமாளிகளாக, வில்லன்களாக பயன்படுத்தி வருகிறது.

அதில் சில உதாரணங்களை நாம் பார்ப்போம்.

* 1992 இல் வெளியான 'குப்பி பாகா' என்ற பெங்காலி திரைப்படம். இது சத்ய ஜித்ரேவால் எழுதப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஒரு ராஜாங்க பூசாரி, பிரம்மானந்த ஆச்சார்யா தான் சாகாவரம் பெற வேண்டும் என்பதற்காக குப்பி மற்றும் பாகாவை இரண்டு விலைமதிப்பில்லாத ரத்தினங்களை திருடச் சொல்கிறார். ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் தான் அவருடைய இறப்பிற்கு காரணமாக இருப்பார் என்று ஒரு தீர்க்கதரிசனம் ஏற்கனவே இருந்ததால், 12 வயது சிறுவர்களை எல்லாம் தன்னுடைய வேலையாட்களாக கடத்தி வைத்துக் கொண்டார்.

அஜித் பாண்டோபத்யாய் என்ற ஒரு சிறந்த நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய சிறப்பான நடிப்பு இந்து சாதுக்களுக்கு எதிராக பயத்தையும் வெறுப்பையும் இயல்பாகவே வரவழைக்கிறது.




 


* 'கோத்ரா' என்ற மற்றொரு பெங்காலி திரைப்படம் இந்திய சினிமாக்களில் காட்டப்படும் ஒரு பொதுவான வழக்கத்தையே பின்பற்றுகிறது. அதாவது இந்து சாமியார்களை 'கோமாளிகளாக' காட்டுவது. அதே சமயத்தில் ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் இந்த திரைப்படத்தில் ஒரு நல்ல மனது கொண்ட காதலனாக சித்தரிக்கப்படுகிறார்.  




 


*2014ல் அமீர் கான் நடிப்பில் வெளியான படம் 'PK' பெரும் பாராட்டுகளைப் பெற்றது. அதற்கான முக்கிய காரணம் இந்தப்படம் இந்து சாமியார்கள், இந்து மக்கள், இந்து கடவுளர்களின் மீதான வெறுப்பை அதிகமாகவே விரிவுபடுத்தியது. சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷங்களையும் எழுப்ப வைத்தது. படம் முழுக்க மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்வதாக கூறி, இந்து மதம் மட்டும் குறிவைக்கப்பட்டது. ஒரு போலி இந்து சாமியார், மக்களை ஏமாற்றி வருவதாகக் காட்டியதோடு, ஒரு நேர்மையான, விசுவாசமான காதலனாக ஒரு பாகிஸ்தானி கதாபாத்திரத்தையும் காட்டியது.




 


வகை 2: உண்மை சம்பவங்களில் பெயர் மாற்றம்

*ஜனவரி 2020 இல் வெளியான 'சப்பாக்' என்ற திரைப்படம் தீபிகா படுகோனை கதாநாயகியாக கொண்டிருந்தது. இந்த திரைப்படம் 15 வயதில் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் கதையை மையமாகக் கொண்டது. உண்மையில் லட்சுமி தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்த நயீம் கானின் சகோதரனை நிராகரித்ததால் தாக்குதலுக்கு உள்ளானார். தாக்கியவனின் பெயர் 'காம்ரன்' ஆனால் படத்தில் 'பாபு' ஆனது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் பாபு என்ற பெயர் பஷீர் என மாற்றப்பட்டது.




 


*அமேசான் ப்ரைமில் இந்த வருட ஜூனில் வெளியான 'ஷெர்னி' என்ற வித்யாபாலனை கதாநாயகியாக கொண்ட திரைப்படம், உண்மையில் நடந்த 'அன்விர்' என்ற ஒரு புலியின் கொலையை மையமாக கொண்டது. அந்த புலியை கொலை செய்தவர்கள் நவாப் அலி கான் மற்றும் அவருடைய மகன் அஸ்கர் அலி கான். ஆனால் இந்த திரைப்படத்தில் புலியைக் கொன்ற கொலையாளிகளை பெயர் இந்து பெயர்களாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையான சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் போது பெயர்கள் மாற்றப்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் பல இடங்களில் மற்ற சமூக சமூகத்தினரின் பெயர்கள் இந்து பெயர்களாக மாற்றப்படுவதற்குப் பின்னால் தவறான உள்நோக்கம் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த வரிசையில் சமீபத்தில் அமேசானில் வெளியான சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படமும் சேர்ந்திருக்கிறது.

இதுபோல இன்னும் பல திரைப்படங்கள். 2012-ல் வெளியான OMG, 1998 இல் வெளியான 'சாங்கார்ஸ்', வலைதள தொடர்களான 'லெய்லா', 'சேக்ரெட் கேம்ஸ்', 'பாலடோக்', ஜீ 5 ல் வெளியாகாமல் நிறுத்தப்பட்ட 'காட் மென்' போன்றவை ஹிந்து மதத்திற்கு எதிராக ஒரு வெறுப்பான சூழலை உருவாக்குகிறது.




 


*நெட்ப்ளிக்ஸ் இல் வெளியான 'சேக்ரட் கேம்சில்' இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மையமாக ஒரு ஆசிரமம் காட்டப்பட்டுள்ளது.

*ஜூன் 2020ல் ஜி5யில் வெளியாகவிருந்த காட் மென் என்ற தமிழ் வலைதள தொடர் பொதுமக்களின் பெரும் கோப வெளிப்பாட்டிற்கு பிறகு நிறுத்தப்பட்டது.




 


*நடிகை அனுஷ்கா சர்மாவை தயாரிக்கப்பட்ட பால்கோட் என்ற அமேசான் பிரைம் தொடர் தீவிரவாதத்திற்கு இந்துக்களின் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறது. 'இந்து தீவிரவாதிகளால்' செய்யப்படும் பிரச்சினைகளுக்கு ஒரு தேசியவாத அரசாங்கம் பாகிஸ்தானையும் 'அப்பாவியான' அதன் உளவுத்துறை மீதும் குற்றம் சாட்டுகிறது என்ற ரீதியில் அந்த கதை செல்கிறது.




 

* ஷாருக்கானால் தயாரிக்கப்பட்ட 'பெட்டாள்' என்று 2020இல் நெட்பிளிக்சில் வெளியான ஒரு தொடர் இந்துக்களை மூட நம்பிக்கை உள்ளவர்களாகவும், சாத்தானை கும்பிடுபவர்களாகவும் சித்தரிக்கிறது.

*2020இல் வெளியான ஒரு வலைதளத் தொடர் 'அசுரா' ஒரு கொலைகாரன் வேதங்களையும் புராணங்களையும் வாசிப்பது போல் காட்டுகிறது.

* இதில் தூர்தர்ஷன் கூட விதிவிலக்கு இல்லை ஒரு முஸ்லிம் குழந்தை ஒரு இந்து யோகா குருவை தன்னை கிண்டல் செய்வதற்காக அடிப்பதுபோல் ஒரு கார்ட்டூனை எல்லாம் தூர்தர்ஷன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.


வலைதள தொடர்களும் திரைப்படங்களும் இதில் முன்னணியில் இருந்தாலும் விளம்பரங்களும் இதற்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டுக்கொண்டிருக்கிறது.

நாட்டில் 'லவ் ஜிகாத்' காரணமாக பல இந்துப் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தனிஷ்க் தங்களுடைய நகைக்கடை விளம்பரத்தில் ஒரு இந்து பெண்மணி தங்களுடைய முஸ்லிம் மாமியார் வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வது போல் காட்டுகிறது. பெரும்பாலான உண்மைக்கு புறம்பானதாகவும், இது தொடர்பாக வரும் தொடர்ச்சியான கொடூரமான செய்திகளை மீது வெள்ளை அடிப்பதற்காக மட்டுமே எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பிற்கு பிறகு, பின் வாங்கப்பட்டது.


Full View


கன்னியாதானம் முறையைப் பற்றி கேள்வி எழுப்பி துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக வெளியிடப்பட்ட 'மான்யபர்' நகை விளம்பரத்தின் மீதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மற்றொன்று தீபாவளிக்கு சற்று முன்னதாக 'பாப் இந்தியா' நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தீபாவளி பண்டிகை விளம்பரத்திற்கு ஒரு உருது மொழியில் பெயர் வைக்கப்பட்டது.


Full View


இன்று பல விளம்பரங்களில் இந்து பெண்களை காட்டினாலும் அவர்களுடைய நெற்றியில் பெயரளவிற்கு கூட பொட்டு என்பதே இல்லை. 2019 இல் ஹிந்துஸ்தான் லீவரின் ப்ரூக் பாண்ட் விளம்பரம் ஒரு இளைஞன் கும்பமேளாவில் தன்னுடைய தந்தையை தொலைப்பதற்கு செல்வதாகக் காட்டியது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பல எதிர்ப்புகளுக்கு ஆளானது. இதன்பிறகு விளம்பரம் பின்வாங்கப்பட்டது.

இந்த வருட ஆகஸ்டில் ஒரு இந்து ஒரு துறவி தங்கள் ஹோட்டலில் பிரியாணி சாப்பிடுவது போல் ஒரு விளம்பரம் வெளியாகி கடும் எதிர்ப்புகளுக்கு ஆளானது.




 


Full View



Full View


விளம்பரங்கள், திரைப்படங்கள் வலைதள தொடர்கள் போதாதென்று காமெடியன்கள் என்கிற பெயரில் மேடையில் ஏறி இவர்களுக்கு கேலி செய்யக் கிடைத்த ஒரே விஷயம் இந்து மதம், இந்து மதம் மட்டுமே. பத்திரிக்கைகள் ஊடகங்கள் ஆகியவையும் இதற்கு சளைத்ததல்ல. இதைத் தடுப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று இத்தகைய இந்து வெறுப்பு கேளிக்கைகள் வெற்றியடையாமல், பணம் பெறாமல் பார்த்துக் கொள்வது. இரண்டாவது, இந்து-ஆதரவு திரைப்படங்கள், கேளிக்கைகளை வெற்றிபெறச் செய்வது. நெகட்டிவ் விஷயங்களை துடைத்தெறிய அதற்கு மேலான அதிகப்படியான நேர்மறையான விஷயங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதும் இதற்கான தீர்வாக அமையும்.  


Translated from: Ritambangla 

Tags:    

Similar News