என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? இந்து மத சின்னங்களை ஏந்தும் மாணவர்களை ஒடுக்குகிறதா கல்வி நிலையகள்?

Update: 2022-01-07 13:36 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மேல்நிலைப்பள்ளியில் "மாணவர்கள் ருத்திராக்ஷம் அணிந்து வர கூடாது" என எச்சரிக்கை விடுத்த ஆசிரியர்களால். மாணவர்களின் பெற்றோர்கள் கோபமுற்றனர்.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்து மத சின்னங்களை  ஏந்துபவர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில், இந்து மாணவி  நெற்றியில் திருநீரு  வைத்துக்கொள்வதை  பொறுத்துக் கொள்ளாத அப்பள்ளியின் ஆசிரியர் அதனை தடுத்துள்ளார். 

மாணவியின் பெற்றோர்கள் இதுகுறித்து  பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.அதற்க்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, பெற்றோரிடம் அதை வைத்து  மிரட்டுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது ஒரு பக்கம் இருக்க,  திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி அருகே, நெய்யாறில்  மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில்  இரண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் "ருத்ராட்சம் உள்ளிட்ட மத சின்னங்கள் அணிந்து பள்ளிக்கு வர வேண்டாம்" என்ற உள்நோக்கம் கொண்ட ஒரு எச்சரிக்கையை  மாணவர்கள் மத்தியில் விடுத்துள்ளனர்.

இச்செய்தி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அவர்களுக்கு தெரிந்தவுடன், உடனே மாணவர்களின்  பெற்றோர்களுடன் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் அந்த இரண்டு ஆசிரியர்கள் கூறியது உண்மைதானா என்று விசாரித்தனர். பின்னர்  பள்ளி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். மேலும்  இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்  கோரிக்கை வைத்தனர். 


Tags:    

Similar News