ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் இராணுவ நடவடிக்கைக்கு வியாழக்கிழமை காலையில் உத்தரவிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, கிழக்கு உக்ரைனில் உள்ள கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெடிச் சத்தம் கேட்டது. உக்ரைனில் விமானப் போக்குவரத்துகள் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக ரஷ்யாவின் துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் காரணமாக உக்ரைனன் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்குள்ளானது. இந்தத் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றார்கள் அந்த வகையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை தற்போது தெரிவித்துள்ளது.
மேலும் இதுபற்றி ஐக்கிய நாட்டு சபையில் சுமுகமான பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டும் தான் இத்தகைய போரை தடுத்து நிறுத்த முடியும் என்றும் இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல்வேறு பல்வேறு நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது பாதிப்புக்குள்ளாகி உள்ளது. 2014க்குப் பிறகு முதல் முறையாக எண்ணெய் விலை 100 டாலர்களைத் தாண்டியது. 'கவனமாக கையாளப் படவில்லை எனில் ரஷ்யா-உக்ரைன் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா உடனடியாக தீவிரத்தை குறைக்க அழைப்பு விடுக்கும் என்றும் கூறப்படுகிறது. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் குறைந்தது 5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கிறது.
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து உலகளாவிய சந்தை வீழ்ச்சியடைந்தது. ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைகளை வீசியதால், டாலருக்கு எதிராக அதன் கரன்சி ரூபிள் 9% சரிந்தது. தொற்று நோய்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து உலக பொருளாதாரங்கள் மீண்டும் மீண்டு வந்த பின்னர் கூடிவரும் நேரத்தில், தற்பொழுது இந்த போரின் காரணமாக கோதுமை மற்றும் உலோகங்கள் போன்ற முக்கிய பொருட்களின் விநியோகம் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நோய் தொற்று மக்களை கவலைக்கு உள்ளாக்கி வந்த நிலையில் போதும் கூட மனிதர்களையும் இத்தகைய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலைமை வந்துள்ளது.