இளசுகள் அண்ணாமலை பக்கம் - மெல்ல நிரம்பும் தமிழக அரசியல் வெற்றிடம்
இளசுகளைக் கவர்ந்த அண்ணாமலை!
இளசுகளைக் கவர்ந்த அண்ணாமலை!
தமிழக அரசியலில் அவ்வபோது சுழற்சி முறையில் மாற்றம் வரும் குறிப்பாக ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒரு முறை தமிழக அரசியலில் ஒருவர் மையப் புள்ளியாக மாறுவார், அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவரே தமிழக அரசியலில் தீர்மானிப்பார். அவரை சுற்றியே தமிழக அரசியல் கருத்துக்களாகட்டும், கலவரமாகட்டும் அத்தனையும் சுழலும்.
1960 களில் ஈ.வே.ராமசாமியிடமிருந்து பிரிந்து வந்து அண்ணாதுரை என்பவர் மையப் புள்ளியாக இருந்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தை துவங்கினர். அன்றைய சூழலில் தமிழக அரசியலில் மையப்புள்ளி அண்ணாதுரை!
பின்னர் முதன் முதலில் தமிழகத்தில் தேசிய கட்சியை வீழ்த்தி மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்தது என்ற வரலாற்றை படைத்தார் அண்ணாதுரை. அதன் பிறகு உடல்நிலை குறைவு காரணமாக அண்ணாதுரை மறைந்த உடன் அப்பொழுது தி.மு.க'வில் முதலமைச்சரை பொறுப்பை ஏற்றார் கருணாநிதி, அப்பொழுது திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட உரசலில் பிரிந்த எம்.ஜி.ஆர் பக்கமே மக்கள் துணையாக நின்றனர். அன்றைக்கு தமிழக அரசியலின் மையப்புள்ளி எம்.ஜி.ராமச்சந்திரன்.
விளைவு எம்ஜிஆர் இறக்கம் தருவாய் வரையில் முதல்வர் பதவியில் இருந்தார். தமிழ்நாடு மக்கள் அவரை இன்று வரை கடவுளாகவே பார்த்து வருகின்றனர், இன்னமும் சமூக வலைதள அரசியல், கூட்டணி, நேஷனல் லெவல் ட்ரெண்டிங் என எதுவும் தெரியாத பலர் எம்.ஜி.ஆர் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிப்பதே அதற்க்கு சான்று.
அதன்பின்னால் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு யார் அந்த தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்புவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் வெற்றிடத்தை நிரப்பியது மட்டுமல்லாமல் தமிழகத்தின் ஆளுமை என்ற பெயரையும் பெற்றார். தி.மு.க'வினரே திணறும் அளவிற்கும் சில திமுகவினர் போற்றும் அளவிற்கும் ஜெயலலிதா அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். அன்றைய அரசியலின் மையப்புள்ளி ஜெயலலிதா.