ஆதரவற்ற குழந்தைகளை சட்டவிரோத மதமாற்றம் - 'வைட் கிராஸ் மினிஸ்டரிஸ்' மீது LRO புகார்! @Legallro

Update: 2021-04-28 01:30 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), ஒடிசாவை சேர்ந்த வைட் கிராஸ் மினிஸ்டரிஸ் (White Cross Ministries) என்ற அமைப்பு, ஒரு அனாதை இல்லத்தில் மைனர் சிறுவர்களை சட்டவிரோதமாக மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறதாக குற்றம் சாட்டியுள்ளது. 

அதன் முக்கிய செயல்பாட்டாளர் பால் அரவிந்தன் நேரடியாகவே மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு LRO கடிதம் எழுதியுள்ளது.

உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News