தொடரும் வருமான வரி சோதனை.. விழி பிதுங்கி நிற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி..
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளவுக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாகவும், மேலும் மதுபான விற்பனைகளில் மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் அவர் முன்னாள் அமைச்சராக இருந்த பொழுது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக தனி குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்பத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான G-Square இல் IT துறையின் சோதனை மற்றும் அமலாக்க இயக்குனரகம் சோதனைகள் நடத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த சோதனை வந்துள்ளது. அடுக்கடுக்காக தற்பொழுது பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
டாஸ்மாக் கடைகளில், 'கரூர் டீம்'க்கு பணம் கொடுப்பதற்காக, மதுபாட்டில்களை விற்கும் போது, 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் அணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக கவர்னரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மனு ஒன்றை அளித்து இருக்கிறார். அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்ற பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் போன்ற நகரங்களில் கலால், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வருமான வரித்துறை சோதனை பக்கத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டை தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு வெளி மாநிலங்களில் சொத்துக்களையும் அவர்கள் தங்களுடைய கணக்கின் கீழ் கொண்டு வர தீவிர முயற்சிகளை செய்து வருகிறார்கள். கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சரின் புகழ் பரவி வருகிறது, வருமான வரித்துறைக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐதராபாத், பெங்களூரு, பாலக்காட்டில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.