இந்திய அரசிற்கே விபூதி அடிக்க பார்த்த BBC.. ரூ. 40 கோடி வருமானத்தை மறைத்தது அம்பலம்!

Update: 2023-06-08 04:38 GMT

கடந்த 2023 ஜனவரி மாதத்தில் BBC தன்னுடைய ஆவண படத்தை வெளியிட்டது. BBC என்பது பிரிட்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு செய்தி நிறுவனம். இந்தியாவில் மும்பை டெல்லி ஆகிய இடங்களில் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் BBCயால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது, பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, 2002 குஜராத் கலவரம் வெடித்தது. இந்த சூழலில் இந்த கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி இந்த ஆவண படத்தை BBC தயாரித்து இருந்தது.

இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி, பல இடங்களில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இன்னும் ஒரு படத்திற்கு இந்தியா முழுவதும் இருக்கும் எதிர்க்கட்சிகளும் மற்றும் இடதுசாரிகளும் பெரும் ஆதரவு கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக இந்த ஒரு படத்தில் மோடிஜி காண கேள்விகள் என்று தொகுப்பில் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்ட இருந்தது. கற்பனைக்கு மிஞ்சும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும், உண்மைக்கு மாறாக பல்வேறு தகவல்கள் இதில் புனையப்பட்டு இருப்பதாகவும் பாஜக தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம்பத்தில் 59 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக வைத்துதான் குஜராத்தில் கலவரம் வெடித்து.

இந்தக் கலவரத்தின் முடிவில் 790 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணாமல் போனதாகவும், 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியதையும் தன் ஆவணப்படத்தில் கூறியிருக்கிறது பிபிசி. இந்த ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து இது குறித்த விவாதங்கள் முன்னெடுக்க தொடங்கியது.


குறிப்பாக, மத்திய அரசின் வெளியுறவுதுறை செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கருத்து கூறியிருக்கிறார். அவர், `இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாகி இருப்பதாகவும், இது ஆவணப்படத்தை இயக்கிய நிறுவனத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது’ என விமர்சித்திருந்தார்.பிபிசி ஆவணப்படத்தை ஆய்வு செய்ததில் அதன் கருத்துகள், உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இந்தியாவில் பல்வேறு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கின்றன. எனவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் இதை சமூகவலைதளத்திலிருந்து நீக்க கோரியிருக்கிறோம் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை செயலா் அபூா்வா சந்திரா, தகவல் தொழில்நுட்ப விதிகளின் (2021) கீழ் சில வலியுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.


இதை தொடர்ந்து BBCயை பழிவாங்கும் வகையில் தான் மத்திய அரசு டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள பிபிசிக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இது பிபிசிக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை என்றும், பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான வெட்கக்கேடான செயல் என்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்திய அரசு BCCஐ பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில்தான் வருமான வரி சோதனை நடத்தியதாகவும் பிசிசி தரப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. பிபிசி மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் ரூ. 40 கோடி வருமானத்தை குறைத்து அறிக்கை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிபிசி இந்தியா நிறுவனத்தால் காட்டப்படும் லாபம் மற்றும் வருமானம் நாட்டின் செயல்பாடுகளின் அளவிற்கு ஏற்ப இல்லை என்று சோதனை நடத்திய போது வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.


அதாவது BBC இந்தியா தன்னுடைய வருமானத்தில் ரூபாய் 40 கோடியை கணக்கில் காட்டவில்லை என்ற அடிப்படையில் தான் பிசிசி இந்தியா மீது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு இருந்தார்கள். இந்த சூழலில் தனது நிறுவனத்தின் வருமானத்தை குறைத்து காட்டியதாக பிபிசி நிறுவனம் ஒப்புக்கொண்ட காரணத்தால், எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி இந்திய அரசிற்கு 40 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்து விபூதி அடிக்க பார்த்த சம்பவம் வெட்ட வெளிச்சமாகி இருப்பதன் காரணமாக இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ன செய்வது? என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள்...    

Tags:    

Similar News