இந்தியாவை சுத்தி ஸ்கெட்ச் போட்ட சீனா.. தொட்டால் அப்புறம் செக்மேட் தான் என காத்திருக்கும் இந்தியா..
இந்தோ-பசிபிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்தியாவை நெருங்க பார்க்கும் சீனா.
இந்தோ-பசிபிக், இந்தியப் பெருங்கடல் பகுதி LAC என அழைப்பார்கள். இந்தப் பகுதிகளில் சீனா தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது. இந்தியாவை நெருங்குவதற்கு பல்வேறு வழிகளில் இந்தோ பசிபிக் பகுதிகளில் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சிகளை எல்லாம் தடை செய்யும் விதமாக இந்தியாவின் நடவடிக்கைகள் தற்பொழுது அமைந்து இருக்கிறது. எளிய தமிழில் புரிய வைக்க வேண்டும் என்றால், ஒரு நாட்டில் எல்லைப் பகுதிக்குள் நுழைவதற்கு அண்டை நாடுகளின் உதவிகளை நாட வேண்டும். அதற்காக சீனா பல்வேறு அண்டை நாடுகளுக்குள் நுழைந்து அதன் எல்லை பகுதி மூலமாக இந்தியாவை சுத்தி ஸ்கெட்ச் போட்டு விடலாம் என்ற ஒரு நினைப்பில் இருக்கிறது. இந்த ஒரு நினைப்பை தவிடு பிடியாக்கும் விதமாக இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது.
சமீபத்தில் கூட கிரேட் கோகோ தீவில் சீனாவின் உளவுத்துறை மையம் அமைக்கப்படுவதை, இந்தியா செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிப்படுத்தியது. இது இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடமாகும். இந்திய மற்றும் சீனப் படைகள் நேருக்கு நேர் சந்திக்கும் மற்றொரு இடமாக இது அமைகிறது. பல ஆண்டுகளாக, சீனா இந்தியாவைச் சுற்றி அச்சுறுத்தல்களின் வட்டத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் இன்றைய இந்தியா 1962ல் சீனா எதிர்கொண்டதை விட வித்தியாசமானது. ஏன் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் அங்கம் வகிப்பது தான். அண்டை நாட்டு உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்து வருவதற்கும், பல்வேறு அண்டை நாடுகளுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்வதற்கும் பின்னணி இருக்கிறது. பல்வேறு நாடுகளுடன் இந்தியா அதிக நட்புறவுடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவை தன்னுடைய சகோதர நாடாகவே பார்க்கிறது.
சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில், இந்தியக் கடற்படைத் தலைவர் ஹரி குமார் சாணக்யா இந்தியா சீனா உறவுகளைப் பற்றி கூறும் பொழுது, "உங்களுக்கு அமைதி வேண்டுமென்றால், நீங்கள் போருக்குத் தயாராக வேண்டும்" என்றும், அதைத்தான் இந்தியா செய்து வருகிறது. எங்கெல்லாம் சீனா இந்தியாவிற்கு எதிராக சதி வேலைகளை செய்ய பார்க்கிறதோ, அங்கு எல்லாம் சீனாவிற்கு முன்பாக இந்தியா தன்னுடைய பாதுகாப்பை முற்றிலும் உறுதி செய்து இருக்கிறது" என்றார். அதை பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம், லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் அல்லது பூட்டானின் டோக்லாம் வரை, இந்தியாவின் நிலையைப் புரிந்து கொள்ளவோ அல்லது பின்பற்றவோ இல்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் டிராகன் வடிவிலான உளவு பலூன்களை அனுப்பி இந்தியாவில் நடக்கும் விபரங்களை சேகரித்து வருவதற்கு சீனா முயற்சி செய்தது.