QUAD நாடுகளுடன் தீவிரமடையும் இந்தியாவின் விண்வெளித் துறை ஒத்துழைப்பு!

Update: 2021-04-03 03:07 GMT

அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய ஒத்துழைப்பை வளர்க்கும் வேளையில் விண்வெளித்துறையில் அவர்களுடைய கூட்டுறவும் ஒத்துழைப்பும் QUAD அமைப்பின் மற்ற இரண்டு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.

2020 இல் நடைபெற்ற இந்திய-அமெரிக்க 2+2 மூலோபாய உரையாடலின் பொழுது விண்வெளித்துறையில் கூட்டுறவின் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (SSA) போன்ற பிரச்சனைகளில் ஒன்றிணைந்து செயல்படவும், விண்வெளியின் பாதுகாப்பான மற்றும் நிலையான பயன்பாட்டை உறுதி செய்யவும் இம்முடிவுகள் உதவும்.

2019ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) பெங்களூருவில் உள்ள அதன் தலைமையகத்தில் தனது சொந்த எஸ் எஸ் ஏ மற்றும் மேலாண்மை இயக்குனரகத்தை அமைத்தது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடந்த 2 + 2 பேச்சுவார்த்தையில் அங்கமாக இருந்த நான்கு அமைச்சர்களும், விண்வெளித்துறையில் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கூட்டுறவை பற்றி முக்கியமான பகுதிகளை விவாதிக்க ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே ஒரு விண்வெளி பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் 2015ல் இருந்து ஈடுபட்டுள்ளன. இதுதான் இந்தியா மற்றொரு நாட்டுடன் தொடங்கும் முதன் முதலில் பேச்சுவார்த்தை ஆகும். இந்த வருடம் மார்ச் மாதத்தில் பூமியில் உயர் தெளிவுத்திறன் கொண்ட ஒரு செயற்கைக்கோள் ரேடாரை இஸ்ரோ தயாரித்து முடிந்தது. இஸ்ரோவின் அறிக்கையின்படி மார்ச் 4ஆம் தேதி இஸ்ரோவின் அகமதாபாத் தளமாகக் கொண்ட விண்வெளி பயன்பாட்டு மையத்திலிருந்து கலிபோர்னியாவில் உள்ள பாசடீனாவில் உள்ள நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

அண்மையில் ஒரு நேர்காணலில் இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கே சிவன் கூறுகையில், இரண்டு ரேடார்கள் ஒன்றிணைந்து தயாரானதும் நாசா அதை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பும் என்றும் இது பெங்களூருவில் உள்ள யு ஆர் ராவ் விண்வெளி மையத்தில் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாசா-இஸ்ரோ செயற்கைக்கோள் திட்டம், ஒரு கூட்டு பூமி கண்காணிப்பு பணியுடன் மேம்பட்ட ரேடார் இமேஜினை பயன்படுத்தி நில மேற்பரப்பு மாற்றங்களின் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்த உலகளாவிய அளவீடுகளை செய்வதற்கு உதவி புரிகிறது. 2007இல் தேசிய அகாடமி ஆப் சயின்ஸ் கணக்கெடுப்பில் இருந்து இந்த நோக்கம் உருவானது.

விவசாய கண்காணிப்பு மற்றும் தன்மை, நிலச்சரிவுகள், இமயமலை பனிப் பாறைகள், மண்ணின் ஈரப்பதம், கடலோர செயல்முறைகள், கடலோர காற்று மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட ஆய்வுகள் என்ற தங்கள் சொந்த நோக்கங்களுடன் இந்த திட்டத்தில் இஸ்ரோ சேர முடிவு செய்தது.

இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் பொழுது விண்வெளி சூழலையும் பூமியையும் ஆய்வு செய்வதற்கான பல்வேறு திட்டங்களில் ஈடுபடுகையில் இந்தியா மற்ற இரண்டு நாடுகளுடனான திட்டங்களையும் பின்பற்றுகிறது.

ஒரு அறிக்கையின்படி ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை காலநிலை மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் முக்கியமான தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு பல பணிகளை நிறுவ திட்டமிட்டுள்ளன. மார்ச் 11 அன்று இஸ்ரோவின் தலைவர் சிவன் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை தலைவர் டாக்டர் ஹிரோஷிம யமஹாவுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.

பூமியின் கண்காணிப்பு, சந்திரன் தொடர்பான கூட்டமைப்பு, செயற்கைக்கோள் வழிசெலுத்தல் தொடர்பாக இரு தரப்பினரும் தங்கள் ஒத்துழைப்பை விவாதம் செய்ததாகவும் எஸ்எஸ்ஏ போன்ற பகுதிகளில் ஒத்துழைப்புக்கான அதிகபட்ச திறனை ஆராய ஒப்புக்கொண்டதாகவும் இஸ்ரோ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


விண்வெளி ஏஜென்ஸிகளும் அரிசி பயிரிடுதல் மற்றும் காற்று தர கண்காணிப்பை செயற்கைக்கோள் தரவை பயன்படுத்தி கண்காணிக்க முடிவு செய்தன. முன்னதாக பெப்ரவரியில் ஆஸ்திரேலியா விண்வெளி நிறுவனத்தின் தலைவர் என்று என்ரிகோ பலெர்மோவை சந்தித்தார் சிவன். 2012 இந்தியா-ஆஸ்திரேலியா அரசாங்கங்களுக்கு இடையிலான சிவில் விண்வெளி, அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பூமியின் கண்காணிப்பு, செயற்கைக்கோள் வழிசெலுத்தல், விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் இந்தியாவின் மனித விண்வெளிப் பயணம் ஆன ககன்யானை ஆதரிப்பதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு பொது போக்குவரத்து முனையத்தை நிறுவி ஆய்வுகள் செய்வதற்கான வாய்ப்பை குறித்து விவாதித்தனர். இந்தியாவிற்கும் QUAD நாடுகளுக்கும் இடையிலான அரசியல் ஒத்துழைப்பு நல்லபடியாக வரும்பொழுது இது மற்ற பகுதிகளிலும் கூட்டுறவை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. 

With Reference: ORF

Tags:    

Similar News