இந்தியா - சீனா - பாகிஸ்தான் உறவுகள்: அமைதிக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கும் இந்தியா?
சவால் விடுத்தாலும் தங்களுடைய நலன்களை பாதுகாக்க முடியும் என்று நிரூபித்த பிறகு தான் அமைதிக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்களை குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, உண்மையான கட்டுப்பாடு எல்லைப் (LAC) பகுதியில் இரு நாட்டு இராணுவங்களும் கடந்த மாதம் பின்வாங்கத் தொடங்கின. மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாடு எல்லையின் (LoC) அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன.
9 சுற்றுகள் உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு, தாங் சோ பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவம் பின்வாங்கத் தொடங்கின. இந்திய-சீன இராணுவங்கள் உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் பல இடங்களில் இன்னும் மோதல் பதற்றத்தில் இருந்தாலும், இரு நாடுகளிடையே சில பல மாதங்களாக நடைபெற்று வரும் மோதல் பதற்றத்தை குறைக்கும் முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளில் இயக்குனர்கள் (DGMO) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச எல்லைப் பகுதிகளில் இதுவரை இருந்த போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடிவு செய்ததாகவும், இது எல்லைப்பகுதிகளில் ஒரு நிலையான அமைதியை இருநாடுகளின் பலன்களுக்காக செயல்படுத்தும் ஒரு முயற்சி எனவும் அறிவித்தனர.
2018ம் இதேபோல் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2020இல் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மீறல்கள் ஏற்பட்டதும் இந்த வருடம் அதற்குள்ளாகவே 600 முறை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய- பாகிஸ்தான் உறவுகளைப் பொறுத்தவரை திடீரென்ற இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இந்திய பாகிஸ்தான் உறவுகளைப் பொறுத்தவரை ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருவகையான தோல்வி எனவே பார்க்கப்படுகிறது.
பயந்து போனதால் எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் விமர்சனம் செய்துள்ளனர், மற்றவர்கள் இது அந்நிய அழுத்தத்தினால் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்தியாவின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதற்கு முன்னால், உள்நாட்டு சூழலில் ஏற்படும் அடிப்படையான மாற்றங்கள், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே விமர்சிக்க முடியும். ஆனால் அதுபோன்ற ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தெரியவில்லை.