டாலர் கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் - அப்படியென்றால் என்ன?

டாலர் கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை அமெரிக்கா நீக்கி உள்ளது, அப்படியென்றால் என்ன என்று பார்ப்போம்.

Update: 2022-11-15 03:12 GMT

டாலர் கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை அமெரிக்கா நீக்கி உள்ளது, அப்படியென்றால் என்ன என்று பார்ப்போம்.

அமெரிக்கா பரஸ்பரம் வர்த்தகம் புரியும் நாடுகளின் அன்னிய செலவாணி பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது. அளவிற்கு அதிகமாக அமெரிக்க டாலரை குவித்து அன்னையர் செலவாணி மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்த நாடுகள் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படுகின்றன.

இதில் அமெரிக்கா முதன்முறையாக 2018 மே மாதம் இந்தியா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை பட்டியலில். சேர்த்தது பின்னர் இந்தியாவை 2019 ஆம் ஆண்டிலேயே கண்கணிப்பு பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க கருவூலத்துறை பரஸ்பர வர்த்த நாடுகளில் பொருளாதாரம் மற்றும் அந்நிய செலவாணி கொள்கைகள் தொடர்பான அறிக்கையை அமெரிக்க பார்லிமென்டில் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அன்னியச் செலவு தொடர்பான பன்னாட்டு நிதியத்தின் வழிகாட்டுதலை இந்தியா சரியாக கடைபிடித்து வருகிறது அதனால் அந்நியசெலாவணி கொள்முதலில் தொடர்ச்சியாக ஒரு தலைப்பட்சமான செயல்களில் இந்தியா ஈடுபடவில்லை இதனையடுத்து டாலர் கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Dinamalar

Similar News