மருத்துவம் அல்லாத வியாபார பொருட்களுக்கும் சான்றிதழ்.. இந்தியன் மெடிக்கல் அஸோஸியேஷனின் மாபெரும் ஊழல்?

Update: 2021-06-09 01:30 GMT

இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (IMA) மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான, அடிக்கடி கேள்விப்பட்ட பெயராக இருக்கும். யோகா குரு பாபா ராம்தேவுடனான பிரச்சனையின் போதும், பலவித வர்த்தக விளம்பரங்களில், பொருட்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் பெயர் பெற்றது.

ஆனால் பலரும் இதன் பெயரின் காரணமாக, அரசாங்க மருத்துவ அமைப்பாகவே கருதி வரலாம். ஆனால் உண்மையில் இந்த அமைப்பு இந்திய மருத்துவர்களின் அரசாங்க அமைப்பு அல்ல. இது மருத்துவர்களின் தன்னார்வ கூட்டமைப்பு மட்டுமே. டெட்டால் சோப்பிலிருந்து ஏசியன் பெயிண்ட் வரைக்கும் இந்த அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட, சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்கள் பல சந்தைகளிலும், விளம்பரங்களிலும் வலம் வருகிறது.

இது தொடர்பாக தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (LRO), இந்திய தரக்கட்டுப்பாடு அமைப்பிடம் (BIS) இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனுக்கு எதிராக புகார் அளித்துள்ளது. மருத்துவத்துடன் தொடர்புகள் அல்லாத வணிக ரீதியிலான பொருட்களுக்கு சட்டவிரோதமாக 'சான்றிதழ்கள்' வழங்கி லட்சக்கணக்கில் கருப்பு பண வருமானம் ஈட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

தர கட்டுப்பாட்டு சட்டம் 2016ன் படி இது குற்றமாகும். இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் இதன் மூலமாக தாங்கள் எவ்வளவு வருமானம் பெற்றுக் கொண்டோம் என்பதை வெளியிட மறுக்கிறது. கம்பெனிகளுடன் இரகசிய ஒப்பந்தங்களை (non-disclosure) செய்து சான்றிதழ்கள் வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

டெட்டால் சோப், பழச்சாறு, பெயிண்ட் உட்பட பல வணிகப் பொருட்களுக்கு சான்றளித்து பெரும் வருமானம் ஈட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு LRO கோரிக்கை விடுத்துள்ளது

Tags:    

Similar News