இந்திய-சீன உறவு: சீனா என்ன தான் நினைக்கிறது? ஓர் அலசல்!

Update: 2021-03-11 03:34 GMT

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையில் தற்போது இருக்கும் நிலைமையை அப்படியே வைத்திருக்க சீனா விரும்பவில்லை. கால்வான் பள்ளத்தாக்கிற்கு மோதலுக்கு முன்னாலிருந்த இந்திய-சீன உறவுகளின் நிலைமைக்கு அது திரும்பிச் செல்ல விரும்புகிறது என்று தெரிகிறது. அப்பொழுது எல்லை மோதலை நிர்வகிக்க நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் (CBM) உதவியது. இருநாடுகளும் மற்ற பகுதிகளில் சாதாரண உறவுகளை தொடர்ந்து கொண்டிருந்தன.

சீன பாராளுமன்ற கூட்டத்தின் பொழுது தனது வருடாந்திர பத்திரிக்கையாளர் சந்திப்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கி பேசுகையில், சீனாவும் இந்தியாவும் கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் என்றும் போட்டியாளர்களோ அல்லது ஒருவருக்கொருவர் ஆபத்தானவர்களோ அல்ல என்று அறிவித்தார். இரு நாட்டு ராணுவமும் பின்வாங்க தொடங்கிய முயற்சிகளைப் பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

எல்லை மோதல் மட்டுமே இந்திய-சீன உறவுகளுக்கு இடையிலான ஒரே விஷயம் அல்ல என்றும் அது வரலாற்றின் மீதமிருக்கும் பிரச்சினைதான் என்றும் அவர் கூறினார். இரு நாடுகளும் நண்பர்களும் கூட்டாளிகளும் ஆவார்கள் என்றும் இத்தகைய சந்தேகங்கள் அவர்களது உறவுகளை மறைக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

எல்லை மோதலை நிர்வகித்துக் கொண்டே மற்ற இடங்களில் கூட்டாண்மையை உருவாக்கி எல்லைப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். சமீபகாலங்களில் சீனாவில் இருந்து வரும் கருத்துக்கள் எல்லாம் (அதிகாரப் பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற) இந்திய-சீன உறவுகள் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன்புள்ள நாட்களுக்கு செல்ல வேண்டும் என்பதைப் பற்றியே உள்ளன.

அதாவது இந்தியர்கள் இந்திய-சீன உறவுகளிடம் இருந்து எல்லை மோதலை பிரித்துப்பார்க்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று தெரிவிப்பதாக உள்ளது. இந்த கண்ணோட்டத்தில் தான் 1993இல் ஒப்பந்தம் செய்யப்பட்டது அப்பொழுது இந்தியா மற்றும் சீனா எல்லை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால் 2020இல் இவையெல்லாம் உபயோகம் இல்லாமல் போய் ஒரு மிகப்பெரிய முறிவு ஏற்பட்டது. 1993 மற்றும் 2020 க்கு இடையில் 1996 ஆம் ஆண்டு நம்பிக்கையே வளர்ப்பதற்கான BPTA மற்றும் அதன் இணை ஒப்பந்தங்கள், 1996 ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான 2005 நெறிமுறை, 2013 ஆம் ஆண்டின் எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் சமாதானத்தை நிலை நாட்டின.

என்ன நடந்திருந்தாலும் 2020ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வுகள் இந்தியாவின் தவறுதான் என்று வாங் கியும் சீனர்களும் கருதுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் படைகளைத் திரட்டி கால்வான் பள்ளத்தாக்கு உள்ள எல்லைப் பகுதிகளில் முழுவதும் ஊடுருவி 8ம் விரலில் இந்தியாவிற்கு உரிமை என கூறப்பட்டுள்ள இடங்களில்இந்திய ரோந்து பணியினை தடுத்தது ஏன் என்பது சீனாவிற்கே வெளிச்சம்.

2020 இல் நடந்த மோதல்கள் பற்றி அவர் கருத்து தெரிவிக்கவில்லை கடந்த ஆண்டு எல்லை பகுதியில் நடந்த சம்பவங்களில் உரிமைகள் மற்றும் தவறுகள் தெளிவாக உள்ளன என்று அவர் கூறினார். இதிலிருந்து சீனா எந்த தவறும் செய்யவில்லை, தவறு முழுவதும் இந்தியா செய்ததே என்று அவர்கள் கருதுவது தெளிவாக தெரிகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீன செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜ்ஜான், இந்திய ராணுவ படையினர் முழுக்க முழுக்க 'சீன பிரதேசமான' கால்வான் நதி பள்ளத்தாக்கிற்குள் நுழைந்ததாகவும், சீன ராணுவத்தின் ரோந்து பணிகளை மே மாதத்தில் தடுத்தது தான் ஜூன் 15-ம் தேதி அன்று மோதலுக்கு வழிவகுத்தது தெரிவித்திருந்தார்.

நடந்த மோதலில், இந்தியா ஏதாவது பங்கினை வகித்து இருக்கலாம். ஆனால் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த இடத்தில் சீனர்கள் இருந்ததிற்கு எந்த காரணமும் இல்லை. அப்பகுதி முழுக்க முழுக்க உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவின் பக்கமே இருந்தது. இந்த பகுதியில் ஏற்கனவே பிரச்சினைகள் இல்லை என்று நமக்கு தெளிவாக தெரியும் பொழுது, சீனா இராணுவத்தினால் முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட மோதல் இது என்பது தெளிவாக தெரிகிறது.

சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டு இல்லை என்பது கால்வான் பள்ளத்தாக்கின் கரையோரம் அல்லது ஷியோக் ஆற்றின் முனையில் வரைக்கும் நீக்கப்பட்டுள்ளது என்று மறுபடியும் மறுபடியும் கூறுவது பொய்யாகும். ஷயாக் நதியின் கடைசி ஏழு அல்லது எட்டு கிலோமீட்டர் நுழையும் பொழுது, அது உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவின் பக்கத்தில் உள்ளது என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. அதனால்தான் ரோந்துப்புள்ளி 14ஐ அவர்கள் அங்கே வைத்திருந்தார்கள். 1970களில் இருந்து அப்பகுதிக்கு அடிக்கடி வருகை புரிந்து கொண்டிருக்கிறார்கள். 


பிப்ரவரி 26 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனான உரையாடலில் அவர் என்ன பேசினாரோ அதையே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தொடர்ந்தார். அப்பொழுது அவர் இந்திய-சீன கொள்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

கிழக்கு லடாக் பகுதியில் இரு நாடுகளும் பின் வாங்கிய பிறகு இதேபோல் வேகத்தை முன்னிறுத்தி, எல்லைப்பகுதி பிரச்சினைகளை சமாளிக்க ஒரு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலாக ஜெய்சங்கர் இருபுறமும் ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த அமைதியும் அவசியம் என்றும் மீதம் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையை இந்திய தரப்பு மிகவும் வித்தியாசமாக பார்த்தது. 2020 டிசம்பரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த பொழுது, இரு தரப்பு ஒப்பந்தங்களை சீனா மீறியது தான் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மிகவும் சேதப்படுத்தியது என்றும் கிழக்கு லடாக்கில் கடந்த வருடம் நடந்த நடவடிக்கைகளுக்கு என்ன காரணம் என்று சீனா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறினார். எல்லைப் பகுதிகளில் இத்தகைய நிலைமைகள் இருக்கும்பொழுது மற்ற பகுதிகளில் சாதாரணமான உறவுகளை தொடர்வது நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறினார்.

இரு தரப்புகள் பின் வாங்கிய பிறகு, சீனா ஊடகங்களில் சீனாவில் இருந்து வரும் முதலீடுகளின் மீது இந்தியா விதித்துள்ள பலவித கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால் கால்வான் பள்ளத்தாக்கு நடவடிக்கைகளுக்கு முன்பாகவே இந்தியா இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவல்களில், இந்தியா இது குறித்து அவசரம் காட்டாது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவிற்கு பல வாய்ப்புகள் இல்லாமல் போகலாம்.

எல்லைப்பகுதிகளில் பிரச்சனைகளையும் தாண்டி இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா 2020-ம் உருவெடுத்துள்ளது. சீன கனரக இயந்திரங்களை, தொலைதொடர்பு உபகரணங்களை இந்தியா நம்பியிருப்பது இந்த வர்த்தக பற்றாக்குறையை 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது.

இத்தனைக்கும் டிவிக்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் சோலார் பேனல்களில் சிறப்பு வரிகள் மற்றும் பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் இவை நடந்து உள்ளது. எனவே சீன முதலீடுகளுக்கு இந்தியா வெளிப்படையாக கதவுகளை திறக்காது என்றாலும் ஒவ்வொரு வழக்கு வாரியாக ஆய்வு செய்து அதை அங்கீகரிக்க இந்தியா தயாராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டில் முடிவடைந்த 13வது ஐந்தாண்டு திட்டத்திற்கு நிர்ணயித்த இலக்குகளை பெரும்பாலும் பூர்த்தி செய்தது. 2020 ஆம் ஆண்டில் பாசிட்டிவான வளர்ச்சியை காட்டிய ஒரே பெரிய பொருளாதாரம் சீனாவாக இருந்தது.

ஜனவரி-பிப்ரவரி காலகட்டத்தில் சீனாவின் ஏற்றுமதி 61 சதவீதம் உயர்ந்தது என்று புள்ளிவிவரங்கள் காட்டின. இத்தகைய சூழலில் சீன பொருளாதாரத்தில் இருந்து இந்தியா உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து தனித்து, சுயசார்புபாரதமாக உருவெடுக்க நமது தேசிய திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

Reference: ORF


Tags:    

Similar News