கோவில் உண்டியல் பணத்தில் இன்னோவா கார், அரசு விழாவில் அலங்காரங்கள் - உண்டியலில் பணம் போட வேண்டாம் என ஆதீனம் கூறியது இதற்கா?

கோவில்களில் உண்டியல் பணம் எங்கே செல்கிறது என்ற கேள்விக்கு பலரும் இதுவரை விளக்கமாக கூறியதில்லை. மதுரையில் சமீபத்தில் நடந்த துறவியர் மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் கூட, 'கோவில் உண்டியலில் பணம் போட வேண்டாம் அந்த பணம் எங்கோ செல்கிறது' என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Update: 2022-06-09 13:55 GMT

கோவில்களில் உண்டியல் பணம் எங்கே செல்கிறது என்ற கேள்விக்கு பலரும் இதுவரை விளக்கமாக கூறியதில்லை. மதுரையில் சமீபத்தில் நடந்த துறவியர் மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் கூட, 'கோவில் உண்டியலில் பணம் போட வேண்டாம் அந்த பணம் எங்கோ செல்கிறது' என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தன்னார்வலர் டி.ஆர்.ரமேஷ், ஆலய வழிபடுவோர் சங்கத்தலைவர் கூறியதாவது, 'பொதுவாக கோவில் உண்டியல் பணம் சில மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு முழுவதுமாக எண்ணப்பட்டு அறநிலையத் துறை அதிகாரிகளால் கோவில் அறங்காவலர் அல்லது செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் அவர்கள் அறியக்கூடிய முதலாம் கணக்கில் எடுக்கப்படும் சிறப்பு உண்டியல் பணத்தை அதற்கான வங்கிக் கணக்கில் போட வேண்டும்.

இதன் பின் தான் பிரச்சினை ஆரம்பமாகிறது, பல கோவில்களில் உண்டியல் வருமானம் தான் அந்த கோவிலின் ஆதாரமாக உள்ளது பழனி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் மிக அதிக அளவில் உண்டியல் வருமானம் உள்ளது.

அந்த கோவில் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டது அதற்காகத்தான் செலவிட வேண்டும் என்பது சட்டம் ஆனால் அவ்வாறு நடக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி,

அதாவது ஒரு சைவ கோவில் என்றால் பூஜை, உற்சவங்கள், கும்பாபிஷேகம், அர்ச்சகர், ஓதுவார், பரிசாரகர், இசைவாணர் ஆகியோருக்கு சம்பளம். சைவசமயம் சார்ந்த தர்மங்கள் பிரச்சாரங்கள் செய்யலாம் அப்படி செய்யும் பொழுது பழக்கவழக்கங்களுக்கு மாறாக செய்யக்கூடாது. தற்போது கோவில் உண்டியல் பணம் ஆணையர் அலுவலக செலவிற்கும், இணை ஆணையர் அலுவலக செலவிற்கும் அதிகமாக போகிறது. அமைச்சர் பயன்பாட்டிலும் துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு இன்னோவா கார்கள் வாங்கப்படுகின்றன.

முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பூ அலங்காரம், செடி அலங்காரம் என இரண்டு லட்ச ரூபாய் செலவில் கோவில் உண்டியல் பணம் செலவாகிறது. சங்கரன் கோவில் உண்டியல் பணத்தை எடுத்து ஆணையர் அலுவலகத்திற்கு நகல் எடுக்கும் இயந்திரம் வாங்குகின்றனர். ஆணையர் அலுவலக கூட்டங்களுக்கு மதிய உணவு, சிற்றுண்டி, டீ, காபி, முறுக்கு இவையெல்லாம் சென்னை கபாலீஸ்வரர் கோவில் உண்டியல் பணத்தில் செலவாகிறது.

ஆணையர் அலுவலகத்திற்கான குடிநீர் சப்ளைக்கு முறை வைத்து வாரம் ஆறு நாட்களுக்கு சென்னையில் உள்ள ஆறு கோவில்களில் உண்டியல் பணம் செலவு செய்கின்றனர், கோவில் உண்டியல் பணத்தில்தான் ஆணையர் அலுவலகத்தில் 13 தட்டச்சு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

கோவில் பணம் கோவிலின் சம்பிரதாயமான விஷயங்களுக்கு தான் செலவு செய்யப்பட வேண்டும் அறநிலையத்துறைக்கு துறை அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் செலவு செய்வதால் சிறை தண்டனைக்கு உரிய குற்றம்' இவ்வாறு அவர் கூறினார்.


Source - Dinamalar

Similar News