பாதுகாப்பு துறையில் நாம் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை மத்திய பா.ஜ.க அரசாங்கம் பல காலமாக நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான முக்கியமான தடைகள், தேவைகள், அதற்கான காரணங்கள் குறித்து சமீர் ஸ்ரீவத்சவா என்ற நிபுணர் ORF தள கட்டுரையில் விளக்கியுள்ளார். அத்தகவல்களின் தமிழ் சாராம்சத்தை கீழே காணலாம். சமீர் ஸ்ரீவத்சவா ஒரு இந்திய ராணுவ அதிகாரி, 20 வருட கால அனுபவங்கள் கொண்டவர்.
கண்டுபிடிப்புக்கும் புதுமைக்கும் இடையே ஒரு தெளிவான வித்தியாசம் உள்ளது. அதாவது கண்டுபிடிப்பு (invention) என்பது ஏற்கனவே இல்லாத ஒரு பொருளை முற்றிலுமாக புதிதாக உருவாக்குவது. புதுமை (innovtation) என்பது ஏற்கனவே இருக்கும் ஒரு பொருளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவது.
ராணுவ ஆயுதங்களை பொருத்தவரை ஆதிகாலத்திலிருந்தே இது கண்டு பிடிப்பாக இல்லாமல் புதுமையாக தான் பெரும்பாலும் இருந்துள்ளது. வில், பீரங்கி, மஸ்கட், அணு ஆயுத விமான குண்டு ஆகியவை கண்டுபிடிப்புகள் ஆக கூறப்பட்டாலும், பீரங்கி படைவண்டி என்பது ஒரு புதுமையாகும். கண்டுபிடிப்பை விட புதுமைகளுக்கான நன்மைகள் அதிகம். ராணுவ ஆயுதத் துறை, புதுமைகளையும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கிறது.
ராணுவத்தில் புதுமையும் கண்டுபிடிப்பும் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக சிலர் மட்டுமே செய்ய முடிந்த விஷயமாக கருதப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், ஐரோப்பா ஆகியவை பல்லாண்டுகளாக இதில் முன்னணியில் உள்ளன. ஆயுத புதுமைகளில் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் புதிய சில நாடுகள் இந்த குழுவில் இடம் பெறுகின்றன. புதிதாக இந்தத் துறையில் இறங்கி உள்ள நாடுகள் சீனா, இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, தென்னாப்பிரிக்கா ஆகிய இவர்கள் டெக்னோவிட்டெட்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் ஏற்கனவே இருக்கும் ஒரு விஷயத்தில் அப்படியே அதன் காப்பியை உருவாக்கி கொடுக்கிறார்கள். சீனா இதில் பிரசித்திபெற்றது. சீனா விரைவில் 'கண்டுபிடிப்பு' குழுவிற்கும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக நடக்கும் ஆராய்ச்சியும் முன்னேற்றமும் தொழிற்சாலைகளும் அவர்களுக்கு எளிதாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. ஆனால் இந்த டெக்னோவிட்டேட்ஸ் நாடுகளுக்கு இது ஒரு லட்சியம். தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு முயற்சி. தற்பொழுது இது ஒரு வித்தியாசமான ஆயுதப் போட்டியை ஏற்படுத்துகிறது. கூடிய சீக்கிரத்தில் டெக்னோவிட்டேட்ஸ் நாடுகளும் கண்டுபிடிப்பாளர்கள் ஆக மாறுவார்கள்.