கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள மசூதியை ஆய்வு செய்யுங்கள் - அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

மதுரா மசூதியில் ஆய்வு செய்வது குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-26 02:59 GMT

மதுரா மசூதியில் ஆய்வு செய்வது குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாக உள்ள இடத்தில் உள்ள மசூதியில் வரும் ஜனவரி இரண்டாம் தேதி ஆய்வு செய்து 20-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மதுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது இங்குள்ள மதுராவில் கிருஷ்ணர் கோவில் உள்ளது.

இங்கு இருந்த காத்த கேசவ தேவர் கோவிலில் இடிக்கப்பட்டு ஷாகித் காமசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த இடத்தில் கிருஷ்ணர் பிறந்ததால் அதை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்து அமைப்பான இந்து சேவா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில் வாரணாசி மசூதி தொடர்பான வழக்கில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நடத்தப்பட்ட ஆய்வுகள் செய்தபின் மசூதியில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதுபோல இக்காம் மசூதியில் ஆய்வு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கிருஷ்ண ஜென்ம பூமி என அழைக்கப்படும் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் முன்பு முகாலய மன்னர் அவுரங்கசீப் உத்தரவில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்த தொடர்பாக மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு பிறகு ஆய்வு செய்து ஆய்வறிக்கையை ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Source - Dinamalar

Similar News