நரேந்திர மோடி அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் அச்சர்யங்கள் நிறைந்துது. ஒவ்வொரு பகுதியும் படிப்போரை வியப்பில் அழ்த்தக்கூடியது. சவால்களால் நிறைந்த அசாதாரணமான வாழ்வு அவருடையது. தேநீர் விற்பனையாளராக இருந்து தேசத்தின் தலைவராக உயர்வதெல்லாம் யாராலும் நினைத்து பார்க்க முடியாத சாதனை.
அவர் உருவாக்கிய வெற்றி சரித்திரம், வாழ்வில் வெல்ல துடிக்கும் யாவருக்கும் ஒரு வாழ்கை கையேடு. அவருடைய வாழ்வின் தனித்துவமே அவர் சந்தித்த சவால்களில் எல்லாம் எதிர்மறையான அம்சங்களை நீக்கிவிட்டு நேர்மறையான அம்சங்களை மட்டும் தேர்வு செய்தது தான். அதுமட்டுமின்றி அந்த நேர்மறையான அம்சத்தில் தான் வெல்வதற்கான வாய்ப்பை சரியாக கண்டறிந்து எடுத்தார்.
திரு. மோடி அவர்களின் நேர்மறை குணத்திற்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் அரை கோப்பை நீரை அவர் முன் நீட்டினால் அவர் அரை கோப்பை காலியாக இருக்கிறது என்று சொல்பவர் அல்ல. அரை கோப்பை நீரும் அரை கோப்பை காற்றும் இருக்கிறது என்று அனைத்தையும் நேர்மறையாக பார்வையோடு, ஒவ்வொரு தடைகல்லையும் வாய்ப்பாக பார்க்க கூடியவர்.
அரசியல் களம் மட்டுமல்ல, சாதிக்க நினைப்பவர்கள் எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் வளர்த்து கொள்ள வேண்டிய நற்குணம் இது. அதை போலவே எந்த அபாயகரமான முடிவக இருந்தாலும் அது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என அவர் நம்பினால் எதற்கும் அஞ்சாமல் துணிந்து எடுக்கும் திறன் கொண்டவர்.
அவர் எடுத்த பல அதிரடி முடிவுகளால் இன்று வேர் வரை புரையோடி போயிருந்த ஊழலை பெருமளவு களைந்திருக்கிறது என்றால் மிகையில்லை. மக்களுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள், கொள்கைகள் எல்லாமே புரட்சிகரமானவை. அனைத்து தரப்பு மக்களுக்கு, பெண்களுக்கு, ஏழை எளியோருக்கு என அவருடைய அரசு மக்களுக்காக அரசாக இருந்து வந்துள்ளது.
அவருடைய நிர்வாக திறனுக்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமெனில் குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அதாவது 13 ஆண்டு காலம் அவர் பணிக்கு விடுப்பே எடுத்ததில்லை தரவுகள் சொல்கின்றன.
கடின உழைப்பு, மக்களின் நலனை முன்வைத்து சிந்திக்கும் அவரின் கருணை என மக்களின் தலைவராக, தேச மக்களின் உணர்வுகளுடன் தோளோடு தோள் நிறுகும் தோழனாக என்றும் திகழும் நரேந்திர மோடி அவர்கள் இன்னும் பல நூறு பிறைகள் காண வேண்டும்.