இது உண்மையிலேயே தேசிய கட்சிதானா? - 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் அடித்த பல்டி

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி இன்று அதற்கு நேர் மாறாக எதிர்ப்பு தெரிவித்து பல்டி அடித்துள்ளது.

Update: 2022-11-12 13:01 GMT

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி இன்று அதற்கு நேர் மாறாக எதிர்ப்பு தெரிவித்து பல்டி அடித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் அரசியல் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தீர்ப்பை வரவேற்கிறோம் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று தி.மு.க'வின் அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் தி.மு.க கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்கிறோம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அந்த தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு வரவேற்று அறிக்கை கொடுத்த காங்கிரஸ் என்று அதே தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது காங்கிரஸின் நிலை இல்லாத தன்மையை காட்டுகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Source - Dinamani

Similar News