திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு மாற்று பாதை கிடைக்குமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு? - கண்டுகொள்ளுமா அரசு!
திருச்செங்கோடு மலை கோவிலுக்கு மாற்று பாதை அமைக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
திருச்செங்கோடு மலை கோவிலுக்கு மாற்று பாதை அமைக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் பிரதான நகரங்களில் திருச்செங்கோடு நகரம் ஒன்றாகும். கடந்த 1994 ஆம் ஆண்டு அப்பொழுது பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு இந்த நகருக்கு மிக பழமையான நேரம் என்ற சான்றிதழ் வழங்கி பெருமை சேர்த்தது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் மலை மீது உள்ள ஒரே ஸ்தலமாக திருஞான சம்பந்தங்களால் வெந்தீரணிந்து என தொடங்கும் தேவாரப் பாடல்கள் பெற்ற சிவாலயங்களில் முக்கிய ஸ்தலமாகவும், உலகிலேயே ஆண் பாதி, பெண் பாதியாக அர்த்தனாரீஸ்வரராக சிவபெருமான் ரூபம் கொண்டு திகழும் ஒரே கோவிலாக சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேச பெருமாளும் ஒரே வளாகத்தில் அருள் பாலிக்கும் திருச்செங்கோடு ஸ்தலம் விளங்குகிறது.
திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் தெய்வத்திருமலை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானது. இந்த கோயிலில் படி வழியாக சென்று மட்டுமே சாமியை தரிசிக்க முடியும் என்ற நிலை இருந்தது மலைப்பாதை அமைப்பதற்கு திருமுக கிருபானந்த வாரியார் இந்த பகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடையே ஆதரவு திரட்டினார்.
1963ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் முதன்முறையாக இந்த கோவிலுக்கு மலை பாதை அமைக்க ஆய்வு குழு அமைத்து 1984 ஆம் ஆண்டு பாதை உருவாக்கப்பட்டது இந்த பாதை தான் தரிசனத்திற்கு செல்வதற்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த பாதை பக்தர்கள் கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்த காரணத்தினால் வாகனத்தால் நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து நிற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவிலில் திருமணங்கள் ஒரே நேரத்தில் சுமார் 40, 50 நடைபெறும் சமயங்களில் திருமண வீட்டார்களும், திருமணத்திற்கு வருபவர்களும் வழக்கமான பக்தர்களும் ஒரே நேரத்தில் மலை பாதையை பயன்படுத்தும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் சாலையில் துவங்கி கிழக்கு புறமாக மலையேறும் சாலை மலையை அரைவட்டமாக சுற்றிக்கொண்டு வருகிறது. மலை மீது ஏறுவதற்கும் மலையை விட்டு இறங்கி வருவதற்கும் இந்த ஒரு சாலை மட்டும்தான் தற்போது இருக்கிறது, திருச்செங்கோடு மக்களை நீண்ட நாள் கோரிக்கையாக இந்த மலை பாதையை ஒரு வழி பாதையாக மாற்றிவிட்டு மாற்று பாதை அமைக்க வேண்டும் என்பதே ஆகும் இது குறித்து மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு செவி சாய்க்குமா என்பதையும் எதிர்பார்த்து வருகின்றனர்.